வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி கடல்பாசி

Photo of Sago agar agar by Rabia Hamnah at BetterButter
534
5
0.0(0)
0

ஜவ்வரிசி கடல்பாசி

Dec-14-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி கடல்பாசி செய்முறை பற்றி

கடல் பாசியில் அதிகம் புரதச் சத்து உள்ளது. ஜவ்வரிசி மாதிரி, இதுவும் உடலை குளிர்ச்சி அடைய வைக்ககும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடல்பாசி-10 கிராம்
  2. தேங்காய் பால் அல்லது பால்-1/4 லிட்டர்
  3. வெணிலா எஸன்ஸ்-2 சொட்டு
  4. ஜவ்வரிசி-1 கப் (Rice cooker cup)
  5. சீனி - தேவைக்கு
  6. மஞ்சள் நிரம் சாரம் -1 ஸ்பூன்
  7. பின்க் நிரம் சாரம் -1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பானையில், ஜவ்வரிசியை 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
  2. அதன் பின்னர், வெந்த ஜவ்வரிசியை வடிகட்டி, அதனை நன்றாக கழுவி, தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும்.
  3. வெந்த ஜவ்வரிசியை 6 பங்குகளாக பிரித்து தனி தனியாக கிண்ணத்தில் வைக்கவும்.
  4. அடுப்பில் பானை வைத்து, கடல் பாசி , சக்கரை, வெணிலா எஸன்ஸ் தேங்காய் பால் அல்லது பால் , மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். கடல் பாசி நன்றாக கரைந்தவுடன், தீ யை சிறிதாக வைக்கவும்.
  5. பாதி அளவு காய்ச்சிய பால் கடல் பாசியை பின்க் நிறம் வண்ண சாரம், ஜவ்வரிசியுடன் கலந்து, ட்ரேயில் ஊற்றவும். சிறிது நேரம் இறுக விடவும். தேவைப்பட்டால் 2 நிமிடம் freezer ல் வைத்து எடுக்கலாம்
  6. முதல் லேயர் இறுகியதும், கத்தியில் காெஞ்சம் மேலாக கீறவும்.
  7. இரண்டாவது லேயர் செய்ய, மற்றொரு பாதி காய்ச்சிய பால் கடல் பாசியை மஞ்சள் நிற வண்ண சாரம் கலந்த ஜவ்வரிசியுடன் கலந்து, முதல் லேயர் மேல் ஊற்றவும். சிறிது நேரம் இறுக விடவும்.
  8. இதை fridge ல் 1 மணி நேரம் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்