வீடு / சமையல் குறிப்பு / வாட்டர்மிலன் மின்ட் லெமனேட்

Photo of Watermelon mint lemonade by Rabia Hamnah at BetterButter
280
3
0.0(0)
0

வாட்டர்மிலன் மின்ட் லெமனேட்

Dec-14-2017
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாட்டர்மிலன் மின்ட் லெமனேட் செய்முறை பற்றி

தர்பூசணியில் நீர் சத்து அதிகம் உள்ளதால் வெயில் காலங்களில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். இதில் விட்டமின், மினரல்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. மேலும் கண்ணுக்கு இது மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தர்பூசணி-20 துண்டுகள்
  2. எலுமிச்சை -1 சிறியது
  3. புதினா -5-10
  4. தேன்-2 டேபிள் ஸ்பூன்
  5. சீனி- ருசிக்கேற்ப
  6. குளிர்ந்த தண்ணீர்- 1/2 கப
  7. சப்ஜா விதை-2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. எலுமிச்சையை சாறு பிளிர்ந்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு மிக்சி கப்பில் தர்பூசணி , சீனி,தேன், புதினா, தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அடிக்கவும்.
  3. சப்ஜா விதையை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்.
  4. பின்பு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் கட்டியும் சேர்த்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்