BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Mint Rava Idly

Photo of Mint Rava Idly by Sowmya Sundar at BetterButter
107
2
5(1)
0

Mint Rava Idly

Dec-15-2017
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • ఆవిరికి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • తక్కువ కొవ్వు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளை ரவை - 2 கப்
  2. புதினா இலை- 1/2 கப்
  3. தயிர்- 1 1/2 கப்
  4. கடுகு - 1/2 டீஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு- 1/2 டீஸ்பூன்
  6. கடலை பருப்பு- 1/2 டீஸ்பூன்
  7. பச்சை மிளகாய்- 2
  8. இஞ்சி - 1 துண்டு
  9. உப்பு
  10. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. சமையல் சோடா- ஒரு சிட்டிகை
  13. முந்திரி பருப்பு- சிறிது

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி புதினா, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கவும்.
  2. மிக்சியில் வதக்கியதை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து ரவையை சேர்த்து மிதமான தீயில் நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  4. பின்னர் சிறிது ஆறியதும் உப்பு,தயிர்,அரைத்த புதினா விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை 20 நிமிடம் வரை ஊற வைக்கவும்.பின் சமையல் சோடா/ ஈனோ ஃபரூட் சால்ட் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  5. இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  6. சுவை மிகுந்த புதினா ரவா இட்லி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Feb-02-2018
Subhashni Venkatesh   Feb-02-2018

super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்