வீடு / சமையல் குறிப்பு / கிரியில்டு சிக்கன் ட்ரும்ஸ்டிக்

Photo of Grilled chicken drumstick by Jayanthy Asokan at BetterButter
389
2
0.0(0)
0

கிரியில்டு சிக்கன் ட்ரும்ஸ்டிக்

Dec-15-2017
Jayanthy Asokan
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிரியில்டு சிக்கன் ட்ரும்ஸ்டிக் செய்முறை பற்றி

இந்த சிக்கன் மற்ற க்ரில்லெட் சிக்கன் போல் இல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் செய்யப்பட்டது. காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், சோம்பு, முந்திரி, பட்டை, இஞ்சி பூண்டு மற்றும் லவங்கம் அரைத்து பன்னிரெண்டு மணி நேரம் ஊற வைத்து ஓவெனில் கிரில் செய்யப்பட்டது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி கால் 8
  2. முந்திரி 10
  3. மஞ்சள் தூள் 1டீஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் 15
  5. மல்லி 2டீஸ்பூன்
  6. சீரகம் 1டீஸ்பூன்
  7. சோம்பு 1டீஸ்பூன்
  8. பட்டை 1இன்ச்
  9. லவங்கம் 3
  10. இஞ்சி பூண்டு விழுது 2டீஸ்பூன்
  11. எண்ணெய் 4டீஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேறப்ப
  13. வெங்காயம் மற்றும் தக்காளி அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி கிட்சன் டவலில் துடைக்க செய்யவேண்டும்.
  2. அனைத்து மசாலா பொருட்களையும் ஒன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
  3. பின் மசாலாவை சிக்கன் ட்ரும்ஸ்டிக்கில் நன்கு பூச வேண்டும்.
  4. பிரிட்ஜ்ல் ஊற வைக்க வேண்டும்.
  5. பன்னிரெண்டு மணி நேரம் ஊற வைத்து மைக்ரோவேவ் க்ரில்லில் க்ரில் செய்யவேண்டும்.
  6. முதல் 15 நிமிடம் ஒரு புறம் பின் மறுபுறம் கிரில் செய்யவேண்டும்.
  7. கிரல்ட் சிக்கன் ட்ரம்ஸ்டிக் தயார்.
  8. வெங்காயம் மற்றும் தக்காளி கொண்டு அலங்கரிக்கவேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்