வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் பர்ஃப்பி

Photo of Chocolate Burfi by Priya Tharshini at BetterButter
399
5
0.0(0)
0

சாக்லேட் பர்ஃப்பி

Dec-15-2017
Priya Tharshini
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் பர்ஃப்பி செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்ய கூடிய இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா - 1 கப்
  2. கொக்கோ பவ்டர் ( இனிப்பு இல்லாத) - 3 மேசைக்கரண்டி
  3. சக்கரை - 11/2 கப்
  4. தண்ணீர் - 1/2 கப்
  5. நெய் - 6 மேசைக்கரண்டி + தட்டில் தடவ

வழிமுறைகள்

  1. பர்ஃப்பி கொட்டும் தட்டை சிறிது நெய் தடவி கிரிஸ் செய்து வைக்கவும்.
  2. ஒரு தட்டில் மைதா மற்றும் கொக்கோ பவ்டர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  3. ஒரு கனமான கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் சூடாக்கி மைதா கொக்கோ கலவை சேர்த்து கிளறி தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
  4. அதே கடாயில் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கறைக்கவும்.
  5. ஒரு கம்பி பதம் வந்ததும் தட்டில் உள்ள கலவை சேர்த்து கட்டி இல்லாமல் கலறவும்.
  6. பிறகு மீதம் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கலறவும்.
  7. கலவை நன்கு பூத்து கொண்டு வரும்.
  8. கலவை நன்கு சுருண்டு கடாயில் ஒட்டாமல் வந்ததும் பதம் தயார்.
  9. அதை நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக தட்டி ஆறவிடவும்.
  10. சிறிது சூடு ஆறியதும் துண்டுகள் போடவும். சாக்லேட் பர்ஃப்பி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்