வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் தட்டபயிறு மசாலா

Photo of Brinjal BlackeyedPea Masala by Sowmya Sundar at BetterButter
389
2
0.0(0)
0

கத்திரிக்காய் தட்டபயிறு மசாலா

Dec-15-2017
Sowmya Sundar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் தட்டபயிறு மசாலா செய்முறை பற்றி

தமிழ்நாட்டில் பிரபலமான இந்த டிஷ் சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்திரிக்காய் - 250 கிராம்( நறுக்கி கொள்ளவும்)
  2. தட்டபயிறு / காராமணி- 1/4 கப்
  3. தேங்காய் துருவல் - 1/4 கப்
  4. கடுகு - 1/2 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. புளி- நெல்லிக்காய் அளவு
  7. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  8. மசாலா அரைக்க :
  9. கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
  10. கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
  11. மிளகாய் வற்றல்- 3
  12. மிளகு- 1 டீஸ்பூன்
  13. சீரகம்- 1/2 டீஸ்பூன்
  14. பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்
  15. உளுத்தம்பருப்பு- 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  2. அதை மிக்ஸியில் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  3. தட்டபயிறை 6 மணி நேரம் முன்பாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
  4. குக்கரில் தட்டபயிறுயுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் வரை வேக விடவும்
  5. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது வதங்கியதும் புளிதண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்
  6. காய் வெந்ததும் வேக வைத்த தட்டாம்பயிறு ( தண்ணீரோடு) சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்து விட்டு இறக்கவும்
  7. கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்
  8. கத்திரிக்காய் தட்டாம்பயிறு மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்