வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமூன்

Photo of Homemade gulab jamun by Rabia Hamnah at BetterButter
291
3
0.0(0)
0

குலாப் ஜாமூன்

Dec-15-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமூன் செய்முறை பற்றி

சூவையான ஜாமூனை அனைவரும் விரும்புவார்கள். பார்ட்டி என்றால் இதற்கு முக்கிய இடம் உண்டு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் பவுடர் – 1 கப்
  2. மைதா – 1 / 2 கப்
  3. சமையல் சோடா – 1 / 2 தேக்கரண்டி
  4. வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  5. எண்ணெய் – பொரிப்பதற்கு
  6. சர்க்கரை பாகு செய்வதற்கு
  7. சக்கரை-2 கப்
  8. தண்ணீர் – 1 கப
  9. ஏலக்காய் – 2

வழிமுறைகள்

  1. பாகு செய்ய: மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்
  3. இதில் தேவையான அளவு பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.பிசைந்த உருண்டையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
  4. உருண்டையை 18 – 20 பாகங்களாகப் பிரித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  5. கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும். எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
  6. அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.
  7. குலாப் ஜாமுனை 1மணி நேரம் சர்க்கரைப் பாகிலையே விட்டு விடவும்.பிறகு எடுத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்