வீடு / சமையல் குறிப்பு / வெஜ் மமோஸ்கள்

Photo of Veg Momo's by Bindiya Sharma at BetterButter
774
179
4.8(0)
0

வெஜ் மமோஸ்கள்

Jul-24-2015
Bindiya Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • பான் ஆசியன்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் மைதா
  2. தாராளமான சிட்டிகை உப்பு
  3. 3 தேக்கரண்டி எண்ணெய்
  4. 1 கப் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்
  5. 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட்
  6. 1/4 கப் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்
  7. 12-15 பற்கள் தோலுரித்த பூண்டு
  8. தேவையான அளவு உப்பும் கருமிளகும்
  9. 1/2 தேக்கரண்டி சோயா சாஸ்
  10. 1 தேக்கரண்டி வெனிகர்
  11. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1
  12. 8 உலர் சிவப்பு மிளகாய் (தேவைக்கேற்ப குறைவாகவோ அதிகமாகவோ சேர்க்கவும்)
  13. 2 தக்காளி வெளுக்கப்பட்டுத் தோலுரிக்கப்பட்டது

வழிமுறைகள்

  1. மாவுக்கு - மாவை உப்பு மற்றும் 1/2 தேக்கரண்டி எண்ணெயோடு சேர்த்து பிசைந்துகொள்க. ஒரு இறுக்கமான மாவாக இருக்கவேண்டும். கிளிங் பிளிம்மால் (ஜவ்வுத்தாள்/பிளாஸ்ட் ஷீட்) கொண்டு மூடி எடுத்து வைக்கவும்.
  2. இறுதியாக 5 பல் பூண்டை நறுக்கி 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி பூண்டை வதக்கவும். ஸ்பிரிங் ஆனியனை நறுக்கிய அனைத்து காய்கறிகளோடு சேர்த்து, ஒரு நிமிடம் கழித்து சோயா, 1/2 தேக்கரண்டி வெனிகர், உப்பு, மிளகு, பச்சை மிளகாயைச் சேர்க்கவும். 10 நிமிடங்கள் காய்கறிகள் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  3. ஒரு சிறிய அளவிலான மாவு உருண்டைகளை எடுத்து மெலிதான வட்டமாக உருட்டி ஆறவைத்துள்ள காய்கறி பூரணத்தை மையத்தில் வைக்கவும். விளிம்புகளை கொஞ்சம் தண்ணீரால் ஈரப்படுத்தி ஒன்றாகக் கொண்டுவந்து அரை நிலவு வடிவத்தில் அழுத்தி மூடவும். அனைத்து மமூஸ்களை இதே போல் செய்து மூடி வைக்கவும்.
  4. ஒரு ஸ்டீமரில்/பிரஷர் குக்கரில் தண்ணீரைச் சூடுபடுத்தி, மமூஸ்களை சற்றே தள்ளித்தள்ளி வைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. மமூஸ்கள் வேகும்போது, தொட்டுக்கொள்ளும் சாசை சிவப்பு மிளகாய், மீதமுள்ள பூண்டு, தக்காளியை ஒரு பிளண்டரில் தயாரித்துக்கொள்க. பொறபொறப்பாக அடித்துக்கொள்க. 1/2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி இந்த சாந்தை அதனுள் ஊற்றி, உப்பு 1/2 தேக்கரண்டி வெனிகரால் பதப்படுத்தவும். அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும். எடுத்து ஆறவிடவும்.
  6. ஆவிபறக்கும் சூட்டான மமூஸ்களை ஒரு கிண்ணத்தில் மிளகாய் பூண்டு டிப்புடனும் இன்னொன்றில் மையோனிசுடனும் உண்டு மகிழ்க!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்