வீடு / சமையல் குறிப்பு / காளான் பிரியாணி

Photo of Mushroom Biryani by Balachandrika Kandaswamy at BetterButter
2095
77
4.2(0)
1

காளான் பிரியாணி

Jan-26-2016
Balachandrika Kandaswamy
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி - 1 1/2 கப் [1 கப் அளவு = 150 மிலி]
  2. காளான் (சுத்தப்படுத்தப்பட்டது நறுக்கப்பட்டது) - 1 கப் (குவியல்)
  3. புதினா இலை - 1 கைப்பிடி அளவு
  4. பெரிய வெங்காயம் - 1/2 (மீதமுள்ள பாதியை ரைத்தா தயாரிக்கப் பயன்படுத்தவும்)
  5. பெரிய தக்காளி - 1/2 அல்லது சிறிய தக்காளி - 1
  6. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  7. பே இலைகள் - 1
  8. இலவங்கப்பட்டை குச்சிகள் - 3 சிறிய துண்டுகள்
  9. ஏலக்காய் - 1
  10. கிராம்பு - 2
  11. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  12. எண்ணெய் - 4-5 தேக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கேற்ற அளவு
  14. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  15. மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
  16. கரம் மசாலா - 1 1/2 தேக்கரண்டி
  17. பச்சை மிளகாய் - 2
  18. தண்ணீர் - 2 1/2 கப்
  19. கொத்துமல்லி இலைகள் - 1 கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  2. பாத்திரத்தை எண்ணெயோடு சூடுபடுத்தி பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, பே இலைகள், இலவங்கப்பட்டைகளை சேர்க்கவும்.
  3. ஒரு நிமிடத்திற்கு அதை வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா இலைகளைச் சேர்க்கவும்
  4. புதினாய இலைகள் சுருங்கும்வரை வறுத்து இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கி காளானைச் சேர்க்கவும்
  6. காளான்கள் மிருதுவானதும் தக்காளி சேர்த்து வதக்கி 5 நிமிடத்திற்கு மூடி சமைக்கவும்
  7. ஊறவைத்த பாஸ்மதி அரிசியைக் கழுவி கலவையோடு சேர்க்கவும்
  8. மசாலாவுடன் கலந்து பிரஷர் குக்கருக்கு மாற்றவும். 2 1/2 கப் தண்ணீரும் கொத்துமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
  9. ஒரு விசிலுக்குப் பிறகு தீயை நிறுத்தவும். பிரஷர் வெளியேறியதும், சாதத்தை மெதுவாக முள்கரண்டியால் கலக்கவும்.
  10. வெங்காய ரைத்தாவோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்