வீடு / சமையல் குறிப்பு / கோழி குருமா

Photo of Chicken Kurma by Rabia Hamnah at BetterButter
67
3
0.0(0)
0

கோழி குருமா

Dec-15-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோழி குருமா செய்முறை பற்றி

சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழி-1/2கி
  2. பல்லாரி-3
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய்- 6-8
  5. இஞ்சி பூன்டு விழுது-1 1/2 டேபிள் ஸ்பூன்
  6. தயிர்-1/2கப்
  7. நெய்-1டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1ஸ்பூன்
  9. மல்லி, புதினா- தேவைக்கு
  10. ஏலக்காய் -3 கருவா-2 பட்டை-1 துன்டு
  11. மசலாவிற்கு
  12. துருவிய தேங்காய்-4 டேபிள் ஸ்பூன
  13. முழு மல்லி-1டேபிள் ஸ்பூன்
  14. பெருஞ சீரகம் -1/4 டேபிள் ஸ்பூன்
  15. சீரகம் -1/4 டேபிள் ஸ்பூன்
  16. மிளகு-2ஸ்பூன்
  17. பாதாம் பருப்பு -4-5
  18. முந்திரி பருப்பு-10-12
  19. எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கோழியை நன்கு சுத்தம் செய்து அதனுடன் தயிர், உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூன்டு விழுது மற்றும் கீறிய மிளகாய் சேர்த்து 1/2 -1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின்பு மசலாவிற்கு தேவையான பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின் பல்லாரி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின்பு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும். சூடானதும் பட்டை, ஏலம், கருவா சேர்க்கவும். பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை வாசனை அடங்கியதும் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு ஊற வைத்த கோழியை சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும். மூடி போட்டு சிம்மில் வைத்து 20 நிமிடம் வேக விடவும்.
  6. பின் அரைத்த விழுதை சேர்த்து மல்லி புதினா சேர்த்து 15 நிமிடம் வேக விடவும். எண்ணெய் பிரிஞ்சி வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்