வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா

Photo of Mutton sukka by Rabia Hamnah at BetterButter
366
3
0.0(0)
0

மட்டன் சுக்கா

Dec-15-2017
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா செய்முறை பற்றி

சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் (அ) பீஃப்-1/2 கி
  2. பல்லாரி-2
  3. இஞ்சி பூண்டு விழுது- 1 1/2 தேக்கரண்டி
  4. வத்தல் தூள்-4 டீஸ்பூன்
  5. மிளகு தூள்-3 டீஸ்பூன்
  6. சீரக தூள்-3 டீஸ்பூன்
  7. சோம்பு தூள்- 2 டீஸ்பூன்
  8. பட்டை-1 நீள துன்டு கிராம்பு-2 ஏலக்காய்- 3-4
  9. எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  10. நெய்- 2 தேக்கரண்டி
  11. உப்பு- தேவைக்கு
  12. முழு மிளகு- 2 ஸ்பூன்
  13. சீரகம்- 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கறியுடன் கொஞ்சம் இஞ்சி பூடு விழுது, வத்தல் தூள், உப்பு சேர்த்து 1/2 முதல் 1 மணி நேரம் வரை ஊர வைக்கவும்.
  2. குக்கரை சூடு படுத்தி காய வைக்கவும். பின் ஒரு பாதி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறியை சேர்த்து 2 விசில் வரும்வரை அரை வேக்காடிற்கு வேகவிடவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலம் கருவா சேர்த்து, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய பல்லாரி சேர்த்து நன்றாக வேக விடவும்.
  4. பின்பு கறியை சேர்த்து வத்தல் தூள், சோம்பு தூள், மிளகு தூள் சீரக தூள் சேர்த்து வேக விடவும்.
  5. சுக்காவிற்கு தண்ணீர் சேர்த்து வேக விடக் கூடாது. கறியை குக்கரில் முதலில் வேக விடுவதால் தண்ணீர் ஊறும். அடி பிடிப்பது போல் இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்.
  6. கறியில் நிற்கும் தண்ணீர் ஒரு சொட்டு கூட இல்லாமல் வரும் சமையம் முழு மிளகு மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கறியுடன் தட்டி பிரட்டி விட்டு இறக்கவும். சுவையான சுக்கா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்