லட்டு | Mootichoor ladoo in Tamil

எழுதியவர் neela karthik  |  16th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mootichoor ladoo by neela karthik at BetterButter
லட்டுneela karthik
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

2

0

லட்டு recipe

லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Mootichoor ladoo in Tamil )

  • கடலை மாவு 200 கிராம்
  • சர்க்கரை 150 கிராம்
  • ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
  • கேசரி பவுடர் பின்ச்
  • எண்ணெய் சிறிது

லட்டு செய்வது எப்படி | How to make Mootichoor ladoo in Tamil

  1. முதலில் கடலை மாவை சலித்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
  2. அதில் பின்ச் உப்பு, கேசரி பவுடர் சேர்த்து கொள்ளவும்.ஓரளவிற்கு தண்ணி போல் இருக்கவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் அதனை கரண்டியில் ஊற்றி தேய்க்கவும்
  4. பூந்தி கரண்டி இல்லையென்றால் இது போன்ற கரண்டி பயன்படுத்தலாம்
  5. பின் சர்க்கரை 1/4 கப் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வந்ததும் அதனுள் பூந்தியை சேர்த்து கிளறவும்.
  6. அதனை மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு நெய் சிறிது சேர்த்து லட்டாக பிடிக்கவும்.
  7. கையில் நெய் தடவி பிடிக்கவும் சிறிது லூசாக இருந்தால் சிறிது ஆற வைத்து பிடிக்கலாம்.

எனது டிப்:

பூந்தி அதிகம் வேக விட்டு மொறு மொறுப்பாக விட கூடாது பூந்தி சர்க்கரை பாகுடன் திராட்சை முந்திரி சேர்த்து பிடிக்கலாம்.

Reviews for Mootichoor ladoo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.