வீடு / சமையல் குறிப்பு / பின்டி ஆலு மசாலா

Photo of Bhindi aloo masala by Krishnasamy Vidya Valli at BetterButter
328
2
0.0(0)
0

பின்டி ஆலு மசாலா

Dec-16-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பின்டி ஆலு மசாலா செய்முறை பற்றி

சப்பாத்தி / ரொட்டி / நாண் / ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளும் சைட்டிஷ் வகை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டைக்காய் - 8 (மீடியம்ஸைஸ்)
  2. உருளைக்கிழங்கு - 1 பெரியது
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 2
  5. ப்ரஷ் கிரீம் - 2 தேக்கரண்டி
  6. ஊறவைத்த பாதாம் / முந்திரி - 5
  7. எண்ணெய் - 2 தேக்கரண்டி மற்றும் வெண்டைக்காயை ஷாலோ பிரை பண்ணுவதற்கு தேவையான அளவு எண்ணெய்
  8. பட்டை - 1 சிறிய துண்டு
  9. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  11. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  12. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  13. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  14. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  15. உப்பு - 1/2தேக்கரண்டி
  16. கரம்மசாலா-1/2தேக்கரண்டி
  17. ஆம்சூர் பவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  18. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 தேக்கரண்டி
  19. சீனி - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. தக்காளி மற்றும் ஊறவைத்த பாதாம் /முந்திரி சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெண்டைக்காயை ஷாலோ பிரை செய்யவும்
  4. பச்சை நிறம் மாறாமல் ப்ரை செய்யவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. ஆலு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு மஞ்சள் பொடி கரம் மசாலா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் தனியா பொடி சேர்க்கவும்
  7. அரைத்த விழுதை சேர்க்கவும்
  8. கிரேவி கெட்டியாகி வரும் நிலையில் ப்ரஷ் கிரீம் சேர்க்கவும்
  9. வெண்டைக்காய் மற்றும் சீனி சேர்க்கவும்
  10. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான பின்டி ஆலு மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்