வீடு / சமையல் குறிப்பு / துவரம் பருப்பு லாலி பாப்

Photo of TOOR DAL LOLLYPOP by Munsila Fathima at BetterButter
73
2
0.0(0)
0

துவரம் பருப்பு லாலி பாப்

Dec-16-2017
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

துவரம் பருப்பு லாலி பாப் செய்முறை பற்றி

சிக்கனில் தான் லாலி பாப் செய்ய வேண்டுமா? வெஜ் பிரியர்களுக்கு சற்று வித்தியாசமாக துவரம் பருப்பு லாலி பாப் ஸ்டார்ட்டர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு - 50 - 75 gm
  2. மைதா (அ) கோதுமை மாவு - 1 - 2 மேஜைக்கரண்டி
  3. அரிசி மாவு - 1/2 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
  5. கபாப் மசாலா - 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/8 தேக்கரண்டி
  7. சாட் மசாலா -சிறிதளவு ( 1/8 - 1/4 தேக்கரண்டி)
  8. உப்பு - தேவையான அளவு
  9. ஆனியன் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  10. கசூரி மேத்தி இலை - சிறிதளவு
  11. எண்ணெய் - பொரித்து எடுக்க
  12. சிவப்பு நிறம் - பீட்ரூட் சாறு சிறிதளவு
  13. கிரேடட் ஹார்ட் சீஸ்
  14. பட்டர்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளுங்கள்.
  2. அரைத்த பருப்புடன் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, கபாப் மசாலா , கசூரி மேத்தி இலை, சாட் மசாலா, பீட்ரூட் சாறு, அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து விரவி கொள்ளுங்கள்.
  3. கையை சற்று தண்ணீரில் முக்கி கொண்டு ஸ்கேயூர்ஸ் இல் முடிந்த வரை மெல்லியதாக பரப்புங்கள்.
  4. இப்போது சூடான எண்ணையில் நன்கு பொரித்து எடுங்கள்.
  5. பொரித்ததும் மேலே பட்டர் தடவி கிரேட்டட் சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்