வீடு / சமையல் குறிப்பு / Tapioca /cassava bonda

Photo of Tapioca /cassava bonda by Saraladevi Chandrabose at BetterButter
431
2
2(1)
0

Tapioca /cassava bonda

Dec-16-2017
Saraladevi Chandrabose
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • తమిళనాడు
 • వేయించేవి
 • చిరు తిండి
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. ஃபில்லிங்: 1 கப் மரவள்ளி கிழங்கு (வேக வைத்து மசித்து)
 2. 1/2 கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
 3. 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி(பொடியாக நறுக்கியது)
 4. 1/2 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை(பொடியாக நறுக்கியது)
 5. 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
 6. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 7. 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
 8. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
 9. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 10. 1/2 தேக்கரண்டி சோம்பு
 11. 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
 12. உப்பு தேவையான அளவு
 13. மாவிற்கு
 14. 3/4 கப் கடலை மாவு
 15. 1/4 கப் பயத்த மாவு
 16. 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
 17. 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
 18. 1/4 தேக்கரண்டி ஓமம் /சீரகம்
 19. 1 சிட்டிகை சோடா உப்பு
 20. 1 சிட்டிகை ஆரஞ்சு ரெட் கலர் (விருப்பப்பட்டால்)
 21. உப்பு தேவையான அளவு
 22. பொரிப்பதற்கு
 23. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

 1. ஃபில்லிங் : கடாயில் எண்ணெய் சிறிது விட்டு சூடானதும் சோம்பி போட்டு தாளித்து கறிவேப்பிலை போட்டு பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி கொள்ளவும்
 2. பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அடுப்பை குறைந்த தணலில் வைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பின்னர் மசித்து வைத்த கிழங்கு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இறக்கும் தருவாயில் கரம் மசாலா தூள் சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்
 3. பின்னர் சற்று சூடு ஆறியதும் கையில் லேசாக எண்ணெய் தடவி இந்த கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
 4. மாவு தயாரிக்க ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, பயத்தமாவு/அரிசி மாவு, சோடா உப்பு, சீரகம், உப்பு, கலர், மிளகாய் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து பின் தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
 5. பொரிக்க கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்
 6. பின்பு ஒவ்வொரு உருண்டையையும் மாவில் நன்கு முக்கி சூடான எண்ணெயில் போட்டு பின் மிதமான சூட்டில் வைத்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
 7. பேப்பர் டவலில் போட்டு எண்ணெய் உறிஞ்சியதும் எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து தக்காளி சாஸ் /தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்
 8. குளிர், மழை காலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான சுவையான ஸ்நாக்ஸ் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Dec-18-2017
BetterButter Editorial   Dec-18-2017

Hi Sai, your image of this recipe has been removed since it was plagiarised. We have a strict policy against plagiarism. Please refrain from uploading images from the Internet. Please upload an original picture at the earliest. Your recipe is currently hidden, once you have posted an original image for the recipe email us at [email protected] so we may display for public viewing.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்