காளான் மசாலா | Mushroom Masala in Tamil

எழுதியவர் Poonam Bachhav  |  27th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mushroom Masala by Poonam Bachhav at BetterButter
காளான் மசாலாPoonam Bachhav
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

4271

0

காளான் மசாலா

காளான் மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Mushroom Masala in Tamil )

 • 200-250 கிராம் பட்டன் காளான்
 • 1 பெரிய அளவு பச்சை மணி மிளகு
 • 1 பெரிய அளவு வெங்காயம்
 • 1 பெரிய அளவு தக்காளி
 • 2-3 பூண்டு பற்கள்
 • 1/2 இன்ச் துண்டு இஞ்சி
 • 2 பச்சை மிளகாய்
 • 2-3 தேக்கரண்டி புதிய கிரீம்
 • 2 தேக்கரண்டி எண்ணெய்
 • 1/4 தேக்கரண்டி சீரகம்
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1/2 தேக்கரண்டி நசுக்கப்பட்ட கஸ்தூரி வெந்தயம்/ உலர் வெந்தயக் கீரை
 • புதிய கொத்துமல்லி இலைகள் அலங்கரிப்பதற்கு
 • சுவைக்கேற்ற உப்பு

காளான் மசாலா செய்வது எப்படி | How to make Mushroom Masala in Tamil

 1. ஓடும் தண்ணீரில் வெள்ளை பட்டன் காளானைக் கழுவி ஒரு சமையல் துண்டினால் தட்டிக் காயவைக்கவும். கத்தியால் அடித்தண்டை நீக்கிவிட்டு துண்டுபோட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை ஒரு மிக்சியில் எடுத்து கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். அதேபோல் தக்காளியையும் வெங்காயத்தை நறுக்கி மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 3. ஒரு கடாயில், மிதமானச் சூட்டில் எண்ணெயைச் சூடுபடுத்தி, அவை வெடிக்க ஆரம்பித்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி வெங்காயம்-தக்காளி சாந்தைச் சேர்த்துக்கொள்ளவும்.
 4. பச்சை வாடை போகும்வரை இந்தச் சாந்தை வதக்கிக்கொள்ளவும். இப்போது மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 5. நன்றாகக் கலந்து கடாயின் பக்கங்களில் இருந்து எண்ணெய் பரியும்வரை வதக்கி நறுக்கிய களான்களையும் குடமிளகாய்களையும் சேர்த்து 1-2 நிமிடங்கள் வதக்கவும். சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து காளான் வேகும்வரை வேகவைக்கவும்.
 6. இப்போது புதிய கிரீமைக் கலந்து நன்றாகக் கலந்து மேலும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும். இறுதியாக நசுக்கிய கஸ்தூரி வெந்தயத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பை நிறுத்தவும்.
 7. பொடியாக நறுக்கிய கொத்துமல்லியால் அலங்கரித்து சப்பாத்தி அல்லது சீரக சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

காளானைத் தண்ணீரில் ஊறவைக்கக்கூடாது என்பதை மனதில்வைத்துக்கொள்ளவும், ஏனெனில் அவை அதிகமானத் தண்ணீரை உறிஞ்சி சொதசொதவென்றாகி உணவின் சுவையைக் கெடுத்துவிடும். இறுதியாக கஸ்தூரி வெந்தயம் சேர்ப்பது குழம்புக்கு அதிக வாசனையைக் கொடுக்கவும்.

Reviews for Mushroom Masala in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.