வீடு / சமையல் குறிப்பு / லன்ச் காம்போ

Photo of Lanch combo by Juvaireya R at BetterButter
1755
4
0.0(0)
0

லன்ச் காம்போ

Dec-17-2017
Juvaireya R
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

லன்ச் காம்போ செய்முறை பற்றி

பார்ட்டி நேரத்தில் மதிய உணவு ,மிகவும் எளிய உணவுகள் . ஆட்டுகறி பிரியாணி,கோழிக்கறி கிரேவி,காரட் பீர்ணி மற்றும் தயிர் வெங்காயம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாஸ்மதி அரிசி -1கிலோ
  2. ஆட்டுக்கறி - 1 கிலோ
  3. நறுக்கிய பெரியவெங்காயம் - 3
  4. பச்சைமிளாகாய்- 3
  5. தயிர்- 500 மி.லி
  6. சின்ன வெங்காய விழுது - 1 கப்
  7. இஞ்சி,பூண்டு விழுது - 150 கிராம்
  8. நெய் - 100 கிராம்
  9. சமையல் எண்ணெய் - 100 கிராம்
  10. கரம் மசாலா - 2 தேக்கரண்டி
  11. மிளகாய் பொடி - 2 மேஜைக்கரண்டி
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. மல்லி,புதினா 2 கப்
  14. கோழிச்சப்பை -4
  15. நறுக்கிய பெரிய வெங்காயம் -1
  16. வெங்காய விழுது - 3 தேக்கரண்டி
  17. இஞ்சி, பூண்டு விழுது - 2தேக்கரண்டி
  18. கறிவேப்பிலை சிறிதளவு
  19. மல்லி,புதினா சிறிதளவு
  20. மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
  21. சிரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
  22. மிளகு பொடி -1 தேக்கரண்டி
  23. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  24. கரம் மசாலா-1/2 தேக்கரண்டி
  25. எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  26. பால்- 1லிட்டர்
  27. மில்க்மேட்- 2தேக்கரண்டி
  28. .துருவிய காரட் - 1 கப்
  29. வறுக்கப்பட்ட ரவை- 50 கிராமம்
  30. சர்க்கரை -1/2 கப்
  31. நெய்-1/2 தேக்கரண்டி
  32. பாதாம், பிஸ்தா- சிறிதளவு

வழிமுறைகள்

  1. அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவும்.
  2. காய்ந்ததும் பட்டை, கிராம்பு,ஏலம், பச்சை மிளாகாய் சேர்க்கவும்.
  3. .,பின் வெங்காயம் சேர்க்கவும்.
  4. நன்கு வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. பின் வெங்காய விழுதை சேர்க்கவும்.
  6. தக்காளி சேர்க்கவும்.
  7. நன்கு வதக்கவும். பின் மிளகாயபொடி மற்றும்
  8. நன்கு வதக்கவும் பின் மல்லி புதினா சேர்க்கவும்.
  9. தயிர் சேர்க்கவும்.
  10. உப்பு சேர்க்கவும்.
  11. பின் கழுவிய ஆட்டுக்கறியை போடவும்.
  12. பின் 5-6 விசில் விட்டு இறக்கவும்.
  13. தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிசியை போடவும்.
  14. 10 நிமிடம் வேகவிடவும்.
  15. பின் தண்ணீரை வடிக்கவும்.
  16. பின் ஒரு பெரியப்பாத்திரத்தில் முதலில் சாதம் போடவும்.
  17. அடுத்து குங்குமப்பூ தண்ணீர தெளிக்கவும்.
  18. பின் பிரியாணி மசால அடுத்து யபோடவும்.
  19. இதெப்போல் சாதம் -ந.பிரியாணி மசாலா-மஞ்சல் நிறம். என செய்யவும்.
  20. பின் பாத்திரத்தின் மேல் சில்வர் பாயயிலை போடவும்.
  21. அதன் மேல் மூடியை போடவும்.
  22. அதன் மேல் தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
  23. பின் பழைய தோசைக்கல்லை சூடெற்றி அதன் மேல் பாத்திரங்களை வைகௌகவும்.
  24. 30 நிமிடம் தம்மில் வைத்துபின் கிளறவும்.
  25. சூடான மட்டன் பிரியாணி தயார்.
  26. கோழி கிரேவி - பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடெற்றி வெங்காயம் சேர்க்கவும்.
  27. இஞ்சி,பூண்டு மற்றும் வெங்காய விழுது சேர்க்கவும்.
  28. தக்காளி சேர்க்கவும்.
  29. மிளகாய் பொடி, கரம்மசலா பொடி,மிளகுபொடி, சிரகபொடி, சோம்பு பொடி சேர்க்கவும்.
  30. உப்பு சேர்க்கவும்.
  31. மல்லி,புதினா சேர்க்கவும்.
  32. கறிவேப்பிலை சேர்க்கவும்.
  33. தயிர் சேர்க்கவும்.
  34. பின் கோழிசப்பையை போடவும்.
  35. பின் நன்கு கிளறி 10-15 வேகவிடவும.்
  36. கறி வேந்ததும் ,கோழி கிரேவியை பரிமாறவும்.
  37. காராட் பீரணீ- பாலை ஏலக்காய் போட்டு காய்ச்சவும்.
  38. பின் பால் காய்ந்ததும் அதில் சர்க்கரை சேர்க்கவும்.
  39. பின் துருவிய காரட்டை பாலில் சேர்க்கவும்.
  40. பின் வறுக்கப்பட்ட ரவையை சேர்க்கவும்.
  41. கட்டிஇல்லாமல் கிளறவும்.
  42. மில்க்மேய்ட் சேர்க்கவும்.
  43. பின் நெய்யில் வறுக்கப்பட்ட பாதாம், பிஸ்தா,உலர்திராட்சை இவற்றை பீரணியில் சேர்க்கவும்.
  44. அருமையான மற்றும் சுவையான காராட் பீர்ணி தயார்.
  45. மட்டன் பிரியாணி, கோழிகிரேவி,காரட் பீர்ணி, தயிர் வெங்காயம். பார்ட்டிக்கு அனைவரும் வாருங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்