Photo of Cinnamon rolls. by Asiya Omar at BetterButter
804
5
0.0(1)
0

Cinnamon rolls.

Dec-17-2017
Asiya Omar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மாவு குழைக்க:-மைதா மாவு -2+ 1/2 கப்
  2. வெது வெதுப்பான பால் -1 கப்
  3. சீனி - 1/4 கப்
  4. ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
  5. பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி
  6. உப்பு - 1 தேக்கரண்டி (தேவைக்கு)
  7. வெண்ணெய் -கால் கப்
  8. ரோலிற்கு தடவ:-
  9. வெண்ணெய் - 1/3 கப்
  10. ப்ரவுன் சுகர் - 1/3 கப்
  11. பட்டைப்பொடி - 1 மேஜைக்கரண்டி
  12. மேலே ஊற்றி செட் செய்ய தே.பொ:-
  13. கிரீம் சீஸ் - 60 மில்லி
  14. வெண்ணெய் - 1 -2 மேஜைக்கரண்டி
  15. பால் -2 மேஜைக்கரண்டி
  16. பொடித்த சீனி - அரை கப்
  17. வெனிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் தயார் செய்யவும்.
  2. ஒரு பவுலில் வெது வெதுப்பான பால்,வெண்ணெய்,சீனி சேர்த்து கலக்கவும்.ஈஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும்.
  3. 2 கப் மாவு சேர்த்து விரவவும்.பிசு பிசுவென இருக்கும்.
  4. விரவி ஈரத்துணி போட்டு ஒரு மணி நேரம் வைத்தால் பொங்கி வரும்.
  5. பொங்கிய மாவை கிச்சன் கவுண்டரில் எடுத்து அரை கப் மாவு சேர்த்து ஒட்டாதபடி பிணைந்து வைக்கவும்.
  6. மாவு தயார்.
  7. மாவை சதுரமாக அரை இன்ச் கெட்டியாகப் பரத்தவும்.வெண்ணெய் மேல் பரவலாக சேர்த்து ப்ரவுன் சுகர் தூவி அது மேல் பட்டைத்தூள் வடிகட்டி உபயோகித்து தூவவும்.
  8. உருளையாக சுற்றவும்.
  9. பிறகு சிறிய வட்ட வட்ட துண்டாக கத்தி கொண்டு வெட்டி வைக்கவும்.
  10. பேக்கிங் ட்ரேயை வெண்ணெய் தடவி வைக்கவும்.ஒவனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்யவும். கேக் பேனில் உருண்டைகளை இடைவெளி விட்டு அடுக்கவும். அடுக்கி மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
  11. பின்பு ஓவனில் வைக்கவும்.
  12. அரைமணி நேரம் வேகவிட்டு எடுக்கவும்.
  13. வேக வைத்து எடுத்த ரோலின் மேல் ஊற்ற ஒரு பவுலில் சீனி,கிரீம் சீஸ்,உருக்கிய வெண்ணெய், பால்,வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  14. அடித்த கலவையை வேகவைத்து எடுத்த சின்னமன் ரோல்ஸ் சூடாக இருக்கும் பொழுதே அதன் மீது பரத்தி விடவும்.
  15. சின்னமன் ரோல்ஸ் தயார்.சிறிது நேரம் விடவும்.
  16. ஒவ்வொரு ரோலாக எடுத்து பரிமாறவும்.
  17. சுவையான சின்னமன் ரோல்ஸ் அசத்தலாக இருக்கும். நானும் என் மகளும் சேர்ந்து செய்தோம். சூப்பர் ஹிட்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Feb-11-2018
Subhashni Venkatesh   Feb-11-2018

சூப்பர்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்