வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோவில் ஸ்பெஷல் மட்டன் சேமியா பிரியாணி

Photo of Nagarcoil special Mutton Semiya Biriyani by Shamla Sabeek at BetterButter
891
2
0.0(0)
0

நாகர்கோவில் ஸ்பெஷல் மட்டன் சேமியா பிரியாணி

Dec-17-2017
Shamla Sabeek
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோவில் ஸ்பெஷல் மட்டன் சேமியா பிரியாணி செய்முறை பற்றி

எங்கள் ஊரில் திருமண விழாக்களில் செய்யக்கூடிய ஸ்பெஷல் மட்டன் சேமியா பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வறுத்த சேமியா 1 பாக்
  2. மட்டன் கிலோ
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. இஞ்சி பூண்டு விழுது 3 தே.க
  6. கரம் மசாலா
  7. ப.மளகாய் 3-4
  8. மஞ்சள் பொடி 1 தே.க
  9. கறி பொளடர் 3-4 தே.க காரத்திர்க்கு ஏற்ப கூடுதல் சேர்க்கலாம்
  10. தேங்காய் பால் 1/2 கப்
  11. மல்லி புதினா
  12. நெய்
  13. எண்ணெய்
  14. உப்பு

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் சேரத்து சேமியாவை வறுத்து வைத்துக்கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி முழு கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், மல்லி புதினா இலைகளை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  3. அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வதங்கிய கலவையுடன் மட்டன், உப்பு, மஞ்சள் மற்றும் 1 மே க கறி பௌடர் சேர்த்து வேக வைக்கவும்
  5. வெந்த மட்டனை வேறு அகலமான பாத்திரத்தில் மாற்றி, தேங்காய் பாலுடன் 3 மே.க கறி பௌடர் கலந்து மட்டனுடன் கொதிக்க விடவும்
  6. சேமியா அளவும் கொதிக்கும் மட்டன் கறியின் தண்ணீர் அளவும் 1:2 அளவில் இருக்க வேண்டும்
  7. வறுத்த சேமியாவை கொதிக்கும் மட்டன் கறியுடன் கலந்து மல்லி புதினா இலைகளை தூவி நன்கு கொதித்த உடன் ஸ்டவ்வை சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து சேமியா வெந்த உடன் இறக்கவும்
  8. நெய்யில் வறுத்த முந்திரியால் பிரியாணியை அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்