Photo of Vegetable Kothu Dosai by Saraladevi Chandrabose at BetterButter
410
3
0.0(2)
0

Vegetable Kothu Dosai

Dec-18-2017
Saraladevi Chandrabose
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மிருதுவான தோசை - 6
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
  3. பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய்) - 1 கப்
  4. பொடியாக நறுக்கிய தக்காளி - 2
  5. பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி
  6. நறுக்கிய கறிவேப்பிலை - 1 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  8. சோம்பு - 1 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  13. எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  14. நெய் - 1 மேஜைக்கரண்டி
  15. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசையை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும்
  2. கடாய் சூடானதும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் சேர்த்து பின் பாதி அளவு வெங்காயம் போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  3. அடுத்து தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வேக விடவும்.பின் தணலை குறைத்து மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.பின் இதற்கு தேவையான உப்பு சேர்க்கவும் தண்ணீர் வற்றி கிரேவி போல வரும் வரையில் வேக விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை குறைந்த தணலில் வைக்கவும்.
  4. ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பாதி வதங்கியதும் காய்கறிகளை ஒன்று ஒன்றாக சேர்த்து கிளறி விட்டு 3/4 பதம் மட்டும் வேகவிடவும் அப்போது தான் கரன்சியான இருக்கும். இப்போது உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  5. இப்போது ஏற்கனவே தயாரித்த மசாலா கலவையை காய்கறியுடன் சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும்
  6. இறுதியாக நறுக்கிய தோசையை இந்த காய்கறி மசாலா கலவையில் சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும் உப்பு சரி பார்த்து மேலே நெய் விட்டு கிளறி இறக்கவும்.
  7. மல்லித்தழை தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்
  8. இது லஞ்ச் பாக்ஸ் உணவுக்கும் ஏற்றது. மீதமான தோசையை பயனுள்ளதாக மாற்றம் செய்ய வழி
  9. இன்னும் சுவை கூட்ட வறுத்த முந்திரி /துருவிய பனீர் தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Dec-20-2017
BetterButter Editorial   Dec-20-2017

Hi Sai, your recipe is currently hidden from public view as it is written in English text. Unfortunately, we are not allowing recipes in 'English Script' for our Tamil Contests. Currently, we have hidden this recipe from public view, please make the change. Kindly ensure that from now on, you kindly submit your recipes in Tamil for our Tamil contests. To enter your recipe in our Tamil contests, please switch to Tamil in the app or website and submit your entry in the Tamil script. Thanks!

Karthik Shanmugham
Dec-18-2017
Karthik Shanmugham   Dec-18-2017

Excellent Traditionally made Recipe...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்