வீடு / சமையல் குறிப்பு / மக்ரோனி வெஜ் & சிக்கன் பிரியாணி

Photo of Pasta veg & chicken briyani by Asiya Omar at BetterButter
760
3
0.0(0)
0

மக்ரோனி வெஜ் & சிக்கன் பிரியாணி

Dec-18-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மக்ரோனி வெஜ் & சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

பாஸ்தாவோடு காய்கறிகள் சிக்கன் சேர்த்து செய்வது.பார்ட்டிக்கு பொருத்தமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மக்ரோனி -200 கிராம்
  2. சிக்கன் வேகவைத்தது - 200 கிராம்
  3. வெங்காயம் -100 கிராம்
  4. தக்காளி- 100 கிராம்
  5. பச்சை மிளகாய் -2
  6. கேரட்,பீன்ஸ்,பீஸ் சேர்த்து -1 கப்
  7. மல்லி,புதினா இலைகள் - கொஞ்சம்
  8. இஞ்சி பூண்டு விழுது -2+1 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  10. பிரியாணி மசாலா -1 தேக்கரண்டி (விரும்பினால்)
  11. தயிர்-2 மேஜைக்கரண்டி
  12. எண்ணெய் நெய் கலந்து - 5 மேஜைக்கரண்டி.
  13. கரம் மசாலா -1/4 -1/2 தேக்கரண்டி
  14. மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
  15. கறி மசாலா -1 தேக்கரண்டி ( சிக்கன் வேக)
  16. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. மக்ரோனியை கொதிக்கும் நீரில் போட்டு சுவைக்கு உப்பு போட்டு வேகவைத்து வடித்து வைக்கவும். பிரியாணிக்கு எல்லாப் பொருட்களும் எடுத்து வைக்கவும். சிக்கன் உப்பு கறிமசாலா ,இஞ்சி பூண்டு 1 தேக்கரண்டிப்போட்டு வெந்து உதிர்த்து வைக்கவும்.
  2. காய்கறிகள் விருப்பம் போல் நறுக்கி வைக்கவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்.வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு கரம் மசாலா வதக்கவும்.
  4. மல்லி,புதினா,மிளகாய்,தக்காளி உப்பு சேர்த்து வதக்கி விடவும்.தயிர் சேர்க்கவும்.காய்கறிகள் சேர்க்கவும்.
  5. மசாலா வகைகள் சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து வேக விடவும்.
  6. வெந்ததும் வேக வைத்த சிக்கன் உதிர்த்து சேர்க்கவும்.
  7. எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
  8. வேக வைத்த மக்ரோனி சேர்க்கவும்.
  9. கலந்து 5 நிமிடம் சிம்மில் மூடி வைக்கவும்.திறந்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
  10. சுவையான பாஸ்தா வெஜ் & சிக்கன் பிரியாணி தயார் வெஜ் பிரியர்கள் சிக்கனை தவிர்க்கலாம்.சிக்கன் பிரியர்கள் சேர்த்துக் கொள்ளவும்.உங்கள் விருப்பம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்