வீடு / சமையல் குறிப்பு / லேயர் ஜெல்லி

Photo of Layer Jelly by fathoom hameed at BetterButter
513
5
0.0(0)
0

லேயர் ஜெல்லி

Dec-18-2017
fathoom hameed
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
180 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

லேயர் ஜெல்லி செய்முறை பற்றி

பார்டி ஜெல்லி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கன்டன்ஸ்ட் மில்க் 1 டின்(400மில்லி)
  2. ஜெலட்டின் பவுடர் 3 மேஜைக்கரண்டி + 4 மேஜைக்கரண்டி
  3. சுடு தண்ணீர் 1 கப் + 4 கப்
  4. சீனி 4 மேஜைக்கரண்டி
  5. புட் கலர்ஸ் ( 4 வெவ்வேறு கலர்)
  6. செர்ரி ( அலங்கரிக்க)

வழிமுறைகள்

  1. 4 மேஜைக்கரண்டி ஜெலட்டினுடன் 4 கப் தண்ணீர் சேரத்து கரைத்துக் கொள்ளவும்.
  2. இதில் சர்க்கரை சேர்த்து 4 பங்காக பிரித்து 4 நிற புட் கலரை சேர்த்துக் கொள்ளவும்.
  3. 1 கப் சுடு தண்ணீரில், 3 மேஜைக்கரண்டி ஜெலட்டினை கரைத்துக் கொள்ளவும்.
  4. இந்தக் கலவையை கன்டன்ஸ்ட் மில்கில் ஊற்றவும்.
  5. முதலில் ஒரு கலர் ஜெலட்டின் கலவையை ஊற்றி குளிர் சாதனப்பெட்டியில் 15 நிமிடம் வைத்து செட் ஆனதும் பால் கலவையை ஊற்றி செட் செய்யவும்.
  6. அது செட் ஆனதும் அடுத்த கலர் ஜெலட்டின் கலவையை ஊற்றி செட் செய்து அதன் மேல் பால் கலவையை ஊற்றவும்.
  7. படத்தில் காட்டிய படி இந்த முறையை மாறி மாறி செய்யவும்.
  8. செர்ரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்