தவா குல்ச்சா | Tawa Kulcha in Tamil

எழுதியவர் Neelima Katti  |  28th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Tawa Kulcha by Neelima Katti at BetterButter
தவா குல்ச்சாNeelima Katti
 • ஆயத்த நேரம்

  4

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1625

0

தவா குல்ச்சா recipe

தவா குல்ச்சா தேவையான பொருட்கள் ( Ingredients to make Tawa Kulcha in Tamil )

 • மைதா - 1 கப்
 • பொடியாக நறுக்கிய புதினா/கொத்துமல்லி - 1 தேக்கரண்டி
 • உருட்டும்போது குல்ச்சாவில் தடவுவதற்கு:
 • சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
 • உப்பு - 1/2 தேக்கரண்டி
 • தயிர் - 2 தேக்கரண்டி
 • வெதுவெதுப்பானத் தண்ணீர் - 1/4 கப் + 2 தேக்கரண்டி (தோராயமாக)
 • நெய்/எண்ணெய் - 2 தேக்கரண்டி + கூடுதலாக சமைப்பதற்கு
 • பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
 • கருப்பு/வெள்ளை எள்ளு - 1 தேக்கரண்டி

தவா குல்ச்சா செய்வது எப்படி | How to make Tawa Kulcha in Tamil

 1. மாவு, சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் அடித்து, சர்க்கரையக் கலந்து உலர் பொருகளையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 2. நெய் தயிர் சேர்த்து மாவில் தடவவும், நன்றாக பூசவும்.
 3. அடுத்து, வெதுவெதுப்பானத் தண்ணீர் அவ்வப்போது ஊற்றி கலந்து மென்மையான மாவாக வரும்வரை பிசைந்துகொள்க.
 4. 5 நிமிடங்களுக்கு மாவு ஒட்டும் தன்மையை இழந்து கெட்டியான பொருளாக மாறும்வரை பிசைந்துகொள்ளவும்.
 5. மாவு முழுக்க நெய் தடவி ஈரமானத் துணி ஒன்றால் அல்லது ஒரு கிளிங் பிளிம்மால் மூடி 3-4 மணி நேரம் எடுத்து வைக்கவும். (மென்மையான குல்ச்சாக்களுக்கு மாவு எடுத்து வைக்கப்படவேண்டியது மிகவும் அவசியம்)
 6. 4 மணி நேரத்திற்குப் பிறகு, மாவை 8-10 சம உருண்டைகளாகப் பிரிக்கவும்.
 7. ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து சற்றே மேற்பரப்பை ஈரப்படுத்தி நறுக்கிய புதினா/கொத்துமல்லி, கருப்பு மற்றும் வெள்ளை எள்ளை வைக்கவும். தரையில் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்திபோல் சற்றே மொத்தமாக உருட்டிக்கொள்ளவும்.
 8. இதற்கிடையில் தவாவைச் சூடுபடுத்தி, சில துளிகள் நெய் விட்டு குல்ச்சாவை அதன் மீது வைக்கவும். மேல் பகதியில் குமிழ்கள் வரத்துவங்கியதும் திருப்பி நெய் தடவி குல்ச்சாவின் இரண்டு பக்கத்தையும் சமமாக வேகவைக்கவும்.
 9. நிறைய நெய் அல்லது வீட்டில் தயாரித்த வெண்ணெயைச் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Tawa Kulcha in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.