Photo of Bread pudding by Yasmin Shabira at BetterButter
378
4
0.0(1)
0

Bread pudding

Dec-18-2017
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் : 3 துண்டு
  2. பால் : 1 கப்
  3. ஜீனி : 1கப் + 2 மேசைக்கரண்டி
  4. கஸ்டர்டு பவுடர் : 2 மேசைக்கரண்டி
  5. நெய் : 1 மேசைக்கரண்டி
  6. பாதாம் அல்லது முந்திரி : 5 -6

வழிமுறைகள்

  1. முதலில் புட்டிங் செய்ய போகும் பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி ஜீனி மற்றும் 1/2 தேக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து கேரமல் செய்து கொள்ள வேண்டும்...
  2. கேரமல்லின் மேலே நட்ஸ் தூவி வைக்கவும்...
  3. ப்ரெட்டை ஓரங்களை வெட்டி விட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்...
  4. ஒரு கடாயில் ஜீனி, கஸ்டர்டு பவுடர் மற்றும் பால் சேர்த்து நன்றாக காய்ச்சவும்... நன்றாக கெட்டி பட்டு வரும் வரை அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்...
  5. நன்றாக கெட்டிப்பட்டு வரும்போது அதில் நெய் சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறவும்...
  6. பின்னர் அதில் அரைத்து வைத்த ப்ரெட் சேர்க்கவும்...
  7. ப்ரெட் சேர்த்து மேலும் 2 நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும்...
  8. கலவையை கேரமலில் கொட்டி ஸ்பூனால் சமமாக தேய்த்து விடவும்...
  9. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நடுவில் ஸ்டாண்டு போட்டு அதில் வைத்து 45 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்...
  10. 45 நிமிடங்கள் களித்து எடுக்கவும்...
  11. புட்டிங்கை வேறு தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்...
  12. ஜில்லென்று சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்...:yum::yum::yum:

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Dec-18-2017
Adaikkammai Annamalai   Dec-18-2017

Super dr...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்