வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பன்னீர் ஃபட்ஜ்

Photo of Beetroot Paneer Fudge by Shamla Sabeek at BetterButter
234
2
0.0(0)
0

பீட்ரூட் பன்னீர் ஃபட்ஜ்

Dec-19-2017
Shamla Sabeek
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பன்னீர் ஃபட்ஜ் செய்முறை பற்றி

பீட்ரூட் மற்றும் பன்னீர் கொண்டு சத்தான கலர் சேர்காத சுவையான ஃபட்ஜ் செய்து விருந்தினரை அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் துருவியது 1கப்
  2. பன்னீர் துருவியது 1 கப்
  3. கண்டன்ஸ்ட் மில்க் 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் 1 tsp
  5. நெய் 3 tsp
  6. பால் 3/4 கப்
  7. பிஸ்தா மற்றும் பாதாம் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட் சேர்த்து 5 முதல் 6 நிமிடம் வதக்கவும்.
  2. அதனுடன் பன்னீரும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.
  3. பச்சை வாடை மாறியதும் பால்,ஏலக்காய் தூள் மற்றும் கண்டன்ஸ்ட் மில்க் கலந்து வேகவைக்கவும்.
  4. ஸ்டவ் சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி கொடுக்கவும் , அடிபிடிக்காமல் பார்த்துகொள்ளவும்.
  5. பால் எல்லாம் வற்றியதும் நெய் கொஞ்சம் ஊற்றி ,பாதாம்,பிஸ்தா கலந்து கிளறி நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்
  6. குளிர்ந்தவுடன் சிறு துண்டுகளாக்கி வெட்டி பாதம், பிஸ்தா தூவி பரிமாறவும்...
  7. சுவையான சத்தான பீட்றரூட் ஃபட்ஜ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்