Photo of Coffee cake by fathoom hameed at BetterButter
442
3
0.0(0)
0

காஃபி கேக்

Dec-19-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காஃபி கேக் செய்முறை பற்றி

கேக்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்நெய் 225 கிராம்
  2. சீனி 225 கிராம்
  3. மைதா 225 கிராம்
  4. மூட்டை 4
  5. பேக்கிங் பவுடர் 3 கே்கரண்டி
  6. நெஸ்காஃபி பவுடர் 3 தேக்கரண்டி
  7. கண்டன்ஸ்ட் மில்க் 3 தேக்கரண்டி
  8. சுடு தண்ணீர் 1/2 கப்
  9. வென்னிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி
  10. ஐசிங் செய்ய:
  11. வெண்நெய் 125 கிராம்
  12. ஐஸிங் சீனி 250 கிராம்
  13. நெஸ்காஃபி தூள் 3 தேக்கரண்டி
  14. சுடு தண்ணீர் 1 மேஜைக்கரண்டி
  15. அலங்கரிக்க தேவையான ஓரியோ, வேஃப்ஃபர், சாக்ககோ பால்ஸ்

வழிமுறைகள்

  1. முதலில் நெஸ்காஃபி, கன்டன்ஸ்ட் மில்க், சுடு தண்ணீர் சேர்த்து காஃபி செய்து ஆரவிடவும்.
  2. பின் வெண்ணெய்யுடன் சீனி சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
  3. ஒரு ஒரு முட்டையாக சேர்த்து நன்கு பீட் செய்து வென்னிலா எஸன்ஸ் ஊற்றவும்.
  4. பின் மைதா, பேக்கிங்பவுடர் சேர்த்து போல்ட் செய்து பேக்கிங் டிரேயில் ஊற்றி 180 டிகிரி செல்ஸியஸில் 40 நிமிடம் பேக் செய்து ஆற விடவும்.
  5. கேக் ஆறியதும் அதை வட்ட வடிவில் 2 ஆக வெட்டி குளிரூட்டவும்.
  6. 3 தேக்கரண்டி காஃபி தூளை 1 மேஜைக்கரண்டி சுடு நீரில் கரைத்துக்கொள்ளவும்.
  7. வெண்ணெய்யுடன் ஐஸிங் சீனி சேர்த்து நன்கு பீட் செய்து பின் காஃபி சேர்த்து பீட் செய்யவும்.
  8. குளிரூட்டிய கேக்கில் ஒன்றின் மேல் ஐஸிங் செய்து மற்றொன்றை அதன் மேல் வைத்து ஐஸிங் செய்து குளிரூட்டவும்.
  9. வேஃப்பர், கொக்கோ பால்ஸ், ஓரியோ கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்