வீடு / சமையல் குறிப்பு / Tri nuts choco cake with royal icing

Photo of Tri nuts choco cake with royal icing by Adaikkammai Annamalai at BetterButter
68
6
0.0(1)
0

Tri nuts choco cake with royal icing

Dec-19-2017
Adaikkammai Annamalai
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் பர்த்டே
 • ஃப்யூஷன்
 • பிரெஷர் குக்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. முந்திரி - 1 கை அளவு
 2. பாதாம் - 1 கை அளவு
 3. பவுடர் சுகர் - 1/2 கப்
 4. பிஸ்கட் எதுவாக இருந்தாலும் சரி 1 பாக்கெட் லேயர்க்கு தேவையான அளவு
 5. வெண்ணெய் - 4 ஸ்பூன்
 6. கண்டன்ஸ்ட் மில்க் - 1/2 கப்
 7. கனோலா ஆயில் - 1/2 கப்
 8. மைதா - 1 1/2 கப்
 9. பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
 10. பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
 11. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீஸ்பூன்
 12. பால் - தேவையான அளவு
 13. மேலே ஐசிங் செய்ய
 14. முட்டை - 1
 15. ஐசிங் சுகர் - 500 gm
 16. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 ஸ்பூன்
 17. உருக வைத்த சாக்லேட் - 3 ஸ்பூன்
 18. கல்லு உப்பு - 2 கப் (வேக வைக்க)
 19. மேலே ப்ரெசெண்ட் செய்ய சாக்லேட்ஸ்
 20. எதுவாக இருந்தாலும் சரி உங்கள் விருப்பம்

வழிமுறைகள்

 1. முதலில் முந்திரியை மற்றும் பாதாம் தண்ணீரில் ஊற வைக்கவும். அரை மணி நேரம் ஊற வைத்து பாதாம் தோல் உரித்து எடுத்து கொள்ளவும்
 2. அதன் பின் பிஸ்கட்டை அரைக்கவும்
 3. அதனுடன் வால் நட் சேர்த்து அரைத்து அதனுடன் வெண்ணெய் சிறிது உருக்கி சேர்த்து எடுத்து கொள்ளவும்
 4. அதன் பின் அரைத்த பிஸ்கட் கலவையை கேக் பேன் அடியில் சேர்க்கவும்
 5. அதை சமப்படுத்தவும் இதே போல்.
 6. அதன் பின் முந்திரி மற்றும் தோல் உரித்து வைத்த பாதாம் மை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அதனுடன் 1/2 கப் சுகர் சேர்க்கவும்
 7. அதனுடன் 1/2 கப் கண்டன்ஸ்ட் மில்க் சேர்க்கவும்
 8. சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
 9. கேக் செய்ய தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
 10. ஒரு பௌலில் அரைத்ததை சேர்க்கவும்
 11. அதனுடன் 1/2 கப் கனோலா ஆயிலை சேர்க்கவும்
 12. கொஞ்சம் கூட மேலே எண்ணெய் நிற்க்காமல் நன்றாக விஸ்க் செய்து எடுத்து கொல்லவும்.
 13. அதன் பின் 1 /2 கப் மைதா.. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன் .., பேக்கிங் சோடா 1 /2 ஸ்பூன் எடுத்து கொள்ளவும்
 14. அதை வடிகட்டியில் சலித்து பௌலில் சேர்க்கவும்
 15. அதன் பின் நன்றாக விஸ்க் செய்து கட்டியில்லாமல் சேர்த்து கொள்ளவும்
 16. அதனுடன் 1 ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து விஸ்க் செய்யவும்
 17. கடைசியக கொஞ்சம் பால் சேர்த்து அதனுடன் உருக வைத்த சாக்லேட் எடுத்து பௌலில் சேர்க்கவும்
 18. ரொம்ப கெட்டியான பதத்தில் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து விஸ்க் செய்யவும்.
 19. இப்பொழுது தயாரான கேக் ரெசிபி எடுத்து கேக் பேனில் மெதுவாக சேர்க்கவும்
 20. இப்பொழுது கேக் பான் தயார்.
 21. பேனை குக்கரில் வைப்பதற்கு முன் குக்கரை ப்ரீ ஹீட் செய்யவேண்டும். அதனால் குக்கரை எடுத்து அதில் கல்லு உப்பு 2 கப் சேர்த்து சமப்படுத்தவும் . பிறகு குக்கர் மூடியில் ரப்பர் மற்றும் விசில் போட கூடாது ... போடாமல் மூடி வைக்கவும் அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வைக்கவும்.
 22. அதன் பின் குக்கர் திறந்து ஸ்டான்ட் வைத்து அதன் மேல் ஒரு தட்டு வைத்து அதன் மேல் கேக் பேன் வைக்கவும்
 23. இதே போல் வைத்த பின் குக்கர் மூடிக்கு விசில் மற்றும் ரப்பர் போடாமல் மூடி 1 மணி நேரம் வைக்கவும்
 24. 1 மணி நேரம் கழித்து வெந்து விட்டதா என பார்க்க வேண்டும் டூத் பிக் அல்லது கத்தியை பயன்படுத்தி பாருங்கள் ஒட்டவில்லை என்றால் வெந்து விட்டது..
 25. கேக் தயார் வெளியே எடுத்து ஆற விடுங்கள்
 26. அதன் பின் 1 கப் சூடு தண்ணீரை எடுத்து அதில் 2 ஸ்பூன் சர்க்கரை கரைய விடுங்கள். அது கரைந்தவுடன் கேக் ஆறியவுடன் இரண்டாக கட் செய்து அதில் இந்த சர்க்கரை தண்ணீரை தடவி கிரீமை தடவவும்
 27. நான் வெறும் முட்டை வெள்ளை மற்றும் ஐசிங் சுகர் பயன்படுத்தி ஐசிங் மேலே பரப்பியுள்ள்ளேன் அதன் மேல் உங்களுக்கு விருப்பமான சாக்லேட் ப்ரெசென்ட் செய்து சுவைக்கலாம்.
 28. சுவையான த்ரீ நட்ஸ் கேக் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Dec-19-2017
Yasmin Shabira   Dec-19-2017

Fantabulous....:heart_eyes::heart_eyes::heart_eyes:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்