வீடு / சமையல் குறிப்பு / ஸ்டஃப்டு கேப்சிகம் வித் கிரேவி

Photo of Stuffed capsicum with gravy by Krishnasamy Vidya Valli at BetterButter
461
2
0.0(0)
0

ஸ்டஃப்டு கேப்சிகம் வித் கிரேவி

Dec-19-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டஃப்டு கேப்சிகம் வித் கிரேவி செய்முறை பற்றி

கொஞ்சம் நேரம் ஆனாலும் அருமையான சைட்டிஷ் இது. சப்பாத்தி / ரொட்டி / நாண் / ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீடியம் ஸைஸ் குடைமிளகாய் - 2
  2. எண்ணெய்-2தேக்கரண்டி
  3. கிரேவி க்கு தேவையானவை
  4. வெங்காயம் - 1 பெரியது
  5. தக்காளி - 2 பெரியது
  6. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் - 2 மேஜைகரண்டி
  7. சீரகம்-1/2தேக்கரண்டி
  8. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  9. பட்டை-1சிறியதுண்டு
  10. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  12. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  13. மஞ்சள் தூள் - 1 / 2 தேக்கரண்டி
  14. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  15. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  16. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  17. சீனி - 2 சிட்டிகை
  18. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1தேக்கரண்டி
  19. ஸ்டஃப்பிங் -தேவையானவை
  20. உருளைகிழங்கு - 1 பெரியது
  21. வெங்காயம் - 1 பெரியது
  22. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  23. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  24. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
  25. மஞ்சள்பொடி-1/2தேக்கரண்டி
  26. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  27. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  28. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  29. உப்பு-1/2தேக்கரண்டி
  30. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை தோல் சீவி வேக வைக்கவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. தக்காளி அரைத்துகொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்
  6. கொடுக்கப்பட்ட பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  7. நன்றாக மசித்து கொத்தமல்லி இலை தூவி தனியாக வைக்கவும்
  8. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  9. அரைத்த தக்காளி சேர்க்கவும்
  10. கொடுக்கப்பட்ட பொடிகள் சீனி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  11. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் சேர்க்கவும்
  12. குடைமிளகாயை மேல்பகுதியில் நறுக்கிக்கொள்ளவும்
  13. உட்புறம் மற்றும் வெளிபுறம் எண்ணெய் தடவிக்கொள்ளவும் பின்னர் முதலில் செய்த உருளைகிழங்கு கலவையை உள்ளே ஸ்டப்ஃ செய்யவும்
  14. கிரேவியில் ஒரு தேக்கரண்டி விடவும்
  15. அதற்கு மேல் மறுபடியும் உருளைகிழங்கு கலவையை ஸ்டப்ஃ செய்யவும்
  16. முதலில் கட் செய்த குடைமிளகாயை மூடி போல் மூடி கடாயில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை வைக்கவும்
  17. குடைமிளகாய் குக் ஆகும் வரை திருப்பி திருப்பி கொடுக்கலாம்
  18. பின்னர் முதலில் செய்த கிரேவியில் ஸ்டப்ஃடு குடைமிளகாயை வைத்து கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்