வீடு / சமையல் குறிப்பு / பாலக் பனீர் உருண்டை குழம்பு

Photo of Palak paneer koftha curry by Subashini Krish at BetterButter
378
2
0.0(0)
0

பாலக் பனீர் உருண்டை குழம்பு

Dec-19-2017
Subashini Krish
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பாலக் பனீர் உருண்டை குழம்பு செய்முறை பற்றி

பாலக் கீரை குழம்பில் மிதக்கும் இந்த பனீர் உருண்டைகள் நாண் ,ரொட்டியுடன் உண்ண மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாலக் கீரை 2 கட்டு சுத்தம் செய்தது
  2. பனீர் 200 கிராம்
  3. வேக வைத்த உருளை கிழங்கு 2
  4. பிரட் 2 துண்டுகள்
  5. பச்சை மிளகாய் 6
  6. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  7. பெரிய வெங்காயம் 2
  8. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  9. சீரகம் 1 தேக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிக்க
  12. அலங்கரிக்க கிரீம்

வழிமுறைகள்

  1. பனீர் , வேகவைத்த உருளைக்கிழங்கு, பிரேட்,பொடியாக நறுக்கிய2 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  2. பாலக் கீரையை கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின் ஐஸ் கட்டிகளை சேர்த்து குளிர வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  3. ஆறிய கீரையை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
  4. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதுசேர்த்து வதக்கவும்
  6. அரைத்து வைத்துள்ள கீரை விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் வைக்கவும்.
  7. கரம் மசாலா இறுதியாக சேர்த்து இறக்கவும்.
  8. உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  9. பரிமாறும் பொழுது கீரை குழம்பில் உருண்டைகளை சேர்த்து கிரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்