Photo of Maggi Momos by Yasmin Shabira at BetterButter
912
4
0.0(1)
0

Maggi Momos

Dec-19-2017
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு : 1 கப்
  2. மேகி : 1 பாக்கெட்
  3. வெங்காயம் : 1
  4. பூண்டு : 2 பல்
  5. எண்ணெய் : 2 1/2 தேக்கரண்டி
  6. உப்பு : சிறிதளவு
  7. சட்னி செய்ய. ::::
  8. தக்காளி : 1 பெரிது
  9. காய்ந்த மிளகாய் : 4
  10. பூண்டு : 4 பல்
  11. ஜீனி : 1/2 தேக்கரண்டி
  12. உப்பு : 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மைதா மாவில் சிறிதளவு உப்பு மற்றும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  2. ஈர துணியால் மூடி வைக்கவும்...
  3. கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
  4. பிறகு அதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி மேகி நூடுல்ஸ் மற்றும் மேகி மசாலா சேர்த்து நன்றாக வேக விடவும்.
  5. பிசைந்து வைத்த மாவை சிறு சிறு வட்டமாக சப்பாத்தி தேய்ப்பது போல் விரித்து கொள்ளவும்...
  6. அதன் நடுவில் மேகியை வைத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் ப்ளீட் செய்யவும்...
  7. ப்ளீட் செய்த மோமோஸை 10-12 நிமிடம் ஆவியில் இட்லி போல் வேக வைத்து எடுத்தால் சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி மோமோஸ் தயார்.
  8. மோமோஸ் சட்னி: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளி, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும்...
  9. ஆறியபின் அவற்றுடன் ஜீனி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்...
  10. மோமோஸிற்கு ஏற்ற சுவையான சட்னி தயார்...
  11. உங்கள் சுவைக்கேற்ப மிளகாயின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Hema Malini
Dec-20-2017
Hema Malini   Dec-20-2017

Nice mam

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்