வீடு / சமையல் குறிப்பு / சாக்கலேட்டு கேக் வித் காபி பிரோஸ்டிங்

Photo of Chocolate cake with coffee frosting by Margaret Charles at BetterButter
565
3
0.0(0)
0

சாக்கலேட்டு கேக் வித் காபி பிரோஸ்டிங்

Dec-19-2017
Margaret Charles
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சாக்கலேட்டு கேக் வித் காபி பிரோஸ்டிங் செய்முறை பற்றி

சிறுவர்கள் விரும்பி உண்ணுவதால் அவர்களுக்கான பார்ட்டியில் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • பிரிட்டிஷ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா மாவு 225 கி
  2. வெண்ணெய் 225 கி
  3. சர்க்கரை 225 கி
  4. முட்டை 2
  5. சாக்கலேட்டு பவுடர் 75கி
  6. பேக்கிங் பவுடர் 1/2 தே க
  7. பேக்கிங் சோடா 1 தே க
  8. உப்பு 1/2 தே க
  9. சாக்கலேட்டு சிரப் 100 மில்லி
  10. பால் 30 மில்லி
  11. எண்ணெய் 30 மில்லி
  12. காபி தூள் 2 மே க
  13. ஐசிங் சுகர் 200 கி
  14. பட்டர் 135 கி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, சாக்கலேட்டு பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து 3 முறை சலித்து வைக்கவும்
  2. ப்ளெண்டர் கொண்டு, வெண்ணெய் சர்க்கரை நன்றாக கலக்கவும்
  3. பின்னர் முட்டைகளை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. சாக்கலேட்டு சிரப் சேர்த்து கலக்கவும்
  5. பின்னர் பால் எண்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பின்னர் மாவு கலவை சேர்த்து மெதுவாக கலந்து ஒரு 9" கேக் டினில் 180℃இல் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  7. இது தயாராகி கொண்டிருக்கும் போது, ஒரு பாத்திரத்தில் ஐசிங் சுகர் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  8. காபி தூளை ஒரு மேஜைக்கரண்டி சூடு தண்ணீரில் கரைத்து ஆற விடவும். உங்கள் சுவைக்கேற்ப ஐசிங் சுகர் கலவையுடன் கலக்கவும்.
  9. காபி அதிகமாகி விட்டால் அல்லது பிரோஸ்டிங் நீர்த்து விட்டால் கூடுதல் ஐசிங் சுகர் சேர்க்கவும்
  10. கேக் தயாரானதும் உங்களுக்கு விருப்பமான முறையில் பிரோஸ்டிங் செய்யலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்