வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயறு கூட்டு

Photo of Green Moong Dal Curry by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
293
5
0.0(0)
0

பச்சைப்பயறு கூட்டு

Dec-20-2017
பிரசன்னா பிரசன்னா NT
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயறு கூட்டு செய்முறை பற்றி

இட்லி,தோசை,சப்பாத்திக்கு ஏற்ற சுவையான ஒரு கூட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சைப்பயறு கால் கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 3
  4. பட்டை,லவங்கம் 3
  5. தேங்காய் துருவல் ஒரு கப்
  6. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  8. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முளைகட்டிய பச்சைபயிரை எடுத்து கொள்ளவும்.
  2. தேவையான பொருட்களை நறுக்கி கொள்ளவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. கொடுக்கப்பட்ட அனைத்து மசலவையும் சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  8. முளைகட்டிய பச்சைபயிரை சேர்த்து வேக விடவும்.
  9. பச்சைப்பயறு நன்றாக வெந்து குழம்பு கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும்.
  10. திக்காக ஆனதும் துருவிய தேங்காய் தூவி கொதி விடவும்.
  11. கடைசியாக சிறிது வறுத்த பச்சை அரிசி மாவு சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்