வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கிரேவி

Photo of Suraikai gravy by saranya sathish at BetterButter
173
6
0.0(0)
0

சுரைக்காய் கிரேவி

Dec-20-2017
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கிரேவி செய்முறை பற்றி

சப்பாத்தி தோசை சாதத்துக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைக்காய் - 1 தோல் சீவி துண்டுகளாக கட் செய்யவும்
  2. வெங்காயம் - 4 - 3 பொடியாக கட் செய்யவும். 1 துருவி வைக்கவும்
  3. புளி தண்ணீர் - 1/2 கப்
  4. தண்ணீர் - 1/4 கப்
  5. எண்ணெய் - தேவையான அளவு
  6. உப்பு
  7. கரம் மசாலா - 2 டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது - சிறிது
  9. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் - 2
  11. சர்க்கரை - 1 ஸ்பூன்
  12. கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிது

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். சுமார் 20 நிமிடம் வதக்கவும்.
  2. காய் நன்கு வெந்ததும் தட்டில் எடுத்து வைக்கவும்.
  3. பின் அதே கடாயில் கட் செய்த வெங்காயம், துருவிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு சூருள வதக்கவும்.
  5. மிளகாய் தூள், உப்பு, வதக்கிய காய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  6. பின் புளி தண்ணீர், தண்ணீர், சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
  7. கிரேவி சற்று திக் ஆகும் போது கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி இலை தூவி 10 நிமிடம் கொதிக்க விட்டு பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்