வீடு / சமையல் குறிப்பு / தக்காளி வதக்கல்

Photo of Sauteed Tomato by Banupriya Jawahar at BetterButter
436
4
0.0(0)
0

தக்காளி வதக்கல்

Dec-20-2017
Banupriya Jawahar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி வதக்கல் செய்முறை பற்றி

பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய எளிய ரெசிப்பி!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பழமான தக்காளி 1/4 கிலோ
  2. பெல்லாரி 1
  3. பூண்டு 5 பல்
  4. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் வற்றல் 3
  6. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  7. கடுகு 1/2 தேக்கரண்டி
  8. அ.உ.பருப்பு 1 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  10. நல்லெண்ணெய் தாளிக்க
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
  2. பூண்டை உரித்துக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, அ.உ.பருப்பு போட்டு தாளிக்கவும்
  4. வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
  6. நறுக்கிய தக்காளி சேர்த்து வேக விடவும்.
  7. தக்காளி மென்மையாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  8. மல்லித்தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்