வீடு / சமையல் குறிப்பு / பாவைக்காய் பிட்லை

Photo of Bitter guard gravy by saranya sathish at BetterButter
5
5
0.0(0)
0

பாவைக்காய் பிட்லை

Dec-20-2017
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாவைக்காய் பிட்லை செய்முறை பற்றி

பாவைக்காய் துவரம் பருப்பு சேர்த்து செய்த கிரேவி. சாதம், தோசை, சப்பாத்திக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாவைக்காய் - 2
  2. துவரம் பருப்பு - 1/3 கப்
  3. புளி தண்ணீர் - 1/2 கப்
  4. உப்பு - சிறிது
  5. எண்ணெய் - 3 டீஸ்பூன்
  6. கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
  7. கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
  8. அரிசி - 1 ஸ்பூன்
  9. துருவிய தேங்காய் - 1/4 கப்
  10. சிவப்பு மிளகாய் - 3
  11. கடுகு - 1 டீஸ்பூன்
  12. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  13. பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
  14. சிவப்பு மிளகாய் - 1
  15. கருவேப்பிலை
  16. வெல்லம் - சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி விதை, கடலை பருப்பு, மிளகாய், அரிசி சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  3. சற்று தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைத்து கொள்ளவும்.
  4. குக்கரில் துவரம் பருப்பு,தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் உற்றி அடுப்பில் வைக்கவும். பின் கடுகு, வெந்தயம், மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் தூள் சேர்த்து புளி தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
  6. பின் பாவைக்காய் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  7. பின் வேகவைத்த பருப்பு, வெல்லம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை சிம்மில் மூடி போட்டு கொதிக்க விடவும்.
  8. அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கலந்து விட்டு பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்