வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கோலா கிரேவி

Photo of Snake gourd Dumplings Gravy by Juvaireya R at BetterButter
479
7
0.0(0)
0

புடலங்காய் கோலா கிரேவி

Dec-20-2017
Juvaireya R
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கோலா கிரேவி செய்முறை பற்றி

கோல உருண்டை நம் தென்இந்திய உணவு,சிறிது வித்தியாசமாக புடலங்காயில் கோலா உருண்டை செய்து அதனை கறி மசால் போட்டு கிரேவி செய்து அதில் புடலங்காய் கோலாவை போட்டு சமைத்தால் மிகவும் அருமையாக இருக்கும்,மற்றும் அசைவ உணவு போலவே இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புடலங்காய் 1
  2. கடலைப்பருப்பு - 150 கிராம்
  3. வெங்காயம் - 4
  4. இஞ்சி,பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் -2
  6. சிறிய பட்டை துண்டு
  7. 3 ஏலக்காய்
  8. 2 கிராம்பு
  9. சிறிய தேங்காய் சில்
  10. சோம்பு - 1 தேக்கரண்டி
  11. சோளமாவு- 2 தேக்கரண்டி
  12. நறுக்கிய வெங்காயம் - 1
  13. சிறிய தக்காளி - 1
  14. வெங்காய விழுது - 1 தேக்கரண்டி
  15. மிளகாய் தூள்- 1/4 தேக்கரண்டி
  16. சோம்புதூள் - 1/4 தேக்கரண்டி
  17. மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
  18. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  19. சீரகத்தூள் -1/4 தேக்கரண்டி
  20. கரம் மசலா - 1/8 தேக்கரண்டி
  21. உப்பு தேவைக்கு
  22. கொத்தமல்லி இலை சிறிதளவு
  23. பொரித்தெடுக்க எண்ணெய்.

வழிமுறைகள்

  1. புடலங்காயை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  2. கடலைப்பருப்பை கழுவி 1மணிநேரம் ஊறவைக்கவும்.
  3. புடலங்காயில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்.
  4. புடலங்காயில் இருந்து தண்ணீர் வெளியேறும்.
  5. தண்ணீரை துணியால் பிழிந்தெடுக்கவும்.
  6. தண்ணீரை வீணாக்காமல் வைக்ககவும்.கிரேவிக்கு உபயோகிக்கலாம்.
  7. மிக்சியில் ஊறவைத்த கடலைப்பருப்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் சில்லு,மசாலா வகைககள் சேர்க்கவும்.
  8. உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  9. அதில் பிழிந்த புடலங்காயையும் போட்டு அரைக்கவும்.
  10. அரைத்ததும் பாத்திரத்தில் போட்டு அதில் சோளமாவு போட்டு கலக்கவும்.
  11. உருண்டைகாளாக உருட்டவும்.
  12. எண்ணெய் காயந்ததும் உருண்டைளை பொரித்தெடுக்கவும்.
  13. பொன்னிறம் வந்ததும் எடுக்கவும்.
  14. பொறித்தெடுத்த புடலங்காய் கோலா உருண்டைகளை பாத்திரத்தில் வைக்கவும்.
  15. காடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்க்கவும்.
  16. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  17. வெங்காய விழுது, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  18. கறிவேப்பிலை சேர்க்கவும்.
  19. உப்பு,மசாலா வகைளை சேர்க்கவும்.
  20. புடலங்காய் தண்ணீரை ஊற்றவும்.
  21. 2-3 நிமிடம் கொதிக்கவிடவும்.
  22. கோலா உருண்டைகளை போடவும்.
  23. நன்கு கிளறவும்.
  24. பின் நறுக்கிய மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
  25. சுவையான புடலங்காய் கோலா உருண்டை கிரேவி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்