உருளைக்கிழங்கு கறி | Potato curry in Tamil

எழுதியவர் Yasmin Shabira  |  20th Dec 2017  |  
5 from 5 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Potato curry by Yasmin Shabira at BetterButter
உருளைக்கிழங்கு கறிYasmin Shabira
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

5

5

10 votes
உருளைக்கிழங்கு கறி recipe

உருளைக்கிழங்கு கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato curry in Tamil )

 • உருளைக்கிழங்கு : 2
 • வெங்காயம் : 1
 • தக்காளி : 2
 • பச்சை மிளகாய் : 2
 • இஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
 • மல்லிதழை : ஒரு கைப்பிடி அளவு
 • பட்டை : ஒரு துண்டு
 • ரம்ப இலை : 1 ( optinal )
 • மிளகாய் தூள் : 1 மேசைக்கரண்டி
 • மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
 • ஜீரக தூள் : 1/2 தேக்கரண்டி
 • மல்லி தூள் : 1/2 தேக்கரண்டி
 • கரம் மசாலா : 1 தேக்கரண்டி
 • எண்ணெய் : 3 தேக்கரண்டி
 • உப்பு : தேவைக்கேற்ப

உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி | How to make Potato curry in Tamil

 1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்...
 2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மற்றும் ரம்ப இலை சேர்க்கவும்...
 3. பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்...
 4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்...
 5. பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்..
 6. தக்காளி நன்றாக மசிந்த பின் கொடுக்க பட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும்...
 7. மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...
 8. 2 அல்லது 3 துண்டு உருளைக்கிழங்கை மட்டும் மேஷர் அல்லது டம்ளரின் அடிப்பாகம் கொண்டு நன்றாக மசித்து விடவும்...
 9. இதனால் கலவை சற்று சுவை கூடுவதுடன் கெட்டி தன்மையும் கிடைக்கும்...
 10. நன்றாக கொதித்த பிறகு மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி தயார்!!!!!

Reviews for Potato curry in tamil (5)

Ghee Dosa2 years ago

Better receipe
Reply
Yasmin Shabira
2 years ago
நன்றி

Gandhi Ji2 years ago

Arumai thozhi.. jai jakkkamma...
Reply
Gandhi Ji
2 years ago
Oops meant jai hind
Yasmin Shabira
2 years ago
நன்றி..

Salomia Nada2 years ago

Pakka
Reply

Faizal S2 years ago

சூப்பர்
Reply

Nandhini Subramaniyan2 years ago

Good in taste and most highlight easy to prepare it
Reply
Yasmin Shabira
2 years ago
thnq dr

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.