வீடு / சமையல் குறிப்பு / டபுள் பீன்ஸ் கிரேவி

Photo of Double beans gravy by Surya Rajan at BetterButter
837
6
0.0(0)
0

டபுள் பீன்ஸ் கிரேவி

Dec-20-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டபுள் பீன்ஸ் கிரேவி செய்முறை பற்றி

டபுள் பீன்ஸ் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. டபுள் பீன்ஸ்  : 1/4 kg
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. மிளகாய் : 1
  5. உப்பு : தேவையான அளவு
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  7. சோம்பு : 1/2 மேஜைக்கரண்டி
  8. பட்டை : சிறிதளவு
  9. கிராம்பு : 2
  10. ஏலக்காய் : 1
  11. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  12. குழம்பு மசாலா (அல்லது) மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  13. கறிவேப்பிலை : சிறிதளவு
  14. நல்லெண்ணெய் : தேவையான அளவு
  15. அரைக்க :
  16. தேங்காய் துருவல் : 4 மேஜைக்கரண்டி
  17. முந்திரி : 6 - 7
  18. கசகசா : ¼  மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. டபுள் பீன்சை 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். ( பிரெஷ் பீன்ஸ் என்றால் 5 நிமிடம் போதும் . காய்ந்தது என்றால் 5-6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் வேக வைக்கவும் )
  2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு , பட்டை , கிராம்பு, ஏலக்காய் , கருவேப்பிலை , வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  3. 1 நிமிடம் கழித்து தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  4. 2 நிமிடம் கழித்து குழம்பு மசாலா (அல்லது) மிளகாய் தூள், சிறிதளவு தண்ணீர், உப்பு  சேர்த்து வதக்கவும்
  5. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த டபுள் பீன்ஸை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  7. பின் தேங்காய் விழுது  ( தேங்காய் துருவல், முந்திரி , கசகசா ) சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் செய்யவும்
  8. கொத்தமல்லி இழை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்