வீடு / சமையல் குறிப்பு / அரைச்சு விட்ட வெங்காய சாம்பார்

Photo of Arachuvitta onion sambar by Sowmya Sundar at BetterButter
367
3
0.0(0)
0

அரைச்சு விட்ட வெங்காய சாம்பார்

Dec-20-2017
Sowmya Sundar
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அரைச்சு விட்ட வெங்காய சாம்பார் செய்முறை பற்றி

சின்ன வெங்காயம் சேர்த்து சாம்பார் பொடி இல்லாமல் நாம் ஃப்ரெஷ்ஷாக பொடி வறுத்து அரைத்து செய்யும் மணக்கும் சாம்பார்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சின்ன வெங்காயம் - 20
  2. தக்காளி- 2
  3. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிது
  4. புளி - எலுமிச்சை அளவு
  5. துவரம் பருப்பு- 1/2 டம்ளர்
  6. மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
  7. உப்பு
  8. வறுத்து அரைக்க
  9. மல்லி விதை- 1 1/2 டீஸ்பூன்
  10. கடலை பருப்பு- 1 1/2 டீஸ்பூன்
  11. மிளகாய் வற்றல்- 8
  12. தேங்காய்- 1/2 மூடி

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
  3. வதங்கியதும் புளி கரைசல் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். அதை தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  5. புளி கொதித்து வெங்காயம் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வெந்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
  6. கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்