வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish curry by Surya Rajan at BetterButter
331
6
0.0(0)
0

மீன் குழம்பு

Dec-20-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைக்க (தேங்காய் விழுது )
  2. தேங்காய் : 1 கையளவு
  3. சின்ன வெங்காயம் : 10
  4. தாளிக்க :
  5. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  6. சின்ன வெங்காயம் : 2
  7. கருவேப்பிலை : சிறிதளவு
  8. வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி
  9. மீன் ( சால்மன் / சங்கரா அல்லது உங்களுக்கு விருப்பமான மீன் )
  10. நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  11. உப்பு : தேவையான அளவு
  12. சின்ன வெங்காயம் : 5
  13. தக்காளி : 1
  14. பூண்டு : 5 - 6 பல்
  15. மிளகாய் : 2
  16. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  17. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
  18. புளி : நெல்லி அளவு

வழிமுறைகள்

  1. மீன் ஐ சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து தனியே வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, பூண்டு (5 பல்), வெங்காயம் (5 ) , தக்காளி சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  3. மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  4. தேவையான தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் ஊற்றி 10 - 15 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
  5. பின் மீன் துண்டுகள் , உப்பு  சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும் .
  6. அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை அனைக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்