வீடு / சமையல் குறிப்பு / பச்சைப் பயறு உருளைக்கிழங்கு கிரேவி

Photo of Green gram potato gravy by Asiya Omar at BetterButter
231
6
0.0(0)
0

பச்சைப் பயறு உருளைக்கிழங்கு கிரேவி

Dec-20-2017
Asiya Omar
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைப் பயறு உருளைக்கிழங்கு கிரேவி செய்முறை பற்றி

வேக வைத்த பச்சைப் பயறு,உருளைக்கிழங்க,மசால் சேர்த்து செய்தால் கிரேவி போலும், அத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வது ஸ்டூ போலும் அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த - பச்சைப் பயறு - 1 கப்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு -1
  3. இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது - தலா ஒரு தேக்கரண்டி
  4. நறுக்கிய பச்சை மிளகாய் - 1
  5. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் தேக்கரண்டி
  6. நறுக்கிய தக்காளி -1
  7. உப்பு - சுவைக்கு.
  8. தாளிக்க:-
  9. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  10. கடுகு, சீரகம் - 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - 2 இணுக்கு.

வழிமுறைகள்

  1. ஊற வைத்த பச்சைப் பயறையும், உருளைக்கிழங்கையும் வேக வைத்து எடுக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்ட கடுகு சீரகம்,கறிவேப்பிலை சேர்க்கவும். நறுக்கிய இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.தக்காளி ,உப்பு சேர்த்து சிறித மூடி விடவும்.தக்காளி வதங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
  4. நன்கு பிரட்டி விட்டு வேக வைத்த பயறு சேர்க்கவும்.ஒரு கப் நீர் சேர்த்து ஒரு சேர கொதித்த பின்பு அடுப்பை அணைக்கவும். நறுக்கிய மல்லி இலை அலங்கரிக்கலாம்.
  5. கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கலாம். சுவையான பச்சைப்பயறு உருளைக்கிழங்கு கிரேவி தயார். விரும்பினால் தேங்காய்ப்பால் அரை கப் சேர்த்து நுரை கூடியவுடன் அடுப்பை அணைக்கவும்.இது ஸ்டூ போல் இருக்கும். இது ஆப்பம் தோசைக்கு நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்