வீடு / சமையல் குறிப்பு / அரைத்த குழம்பு

Photo of Araitha kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
31
4
0.0(0)
0

அரைத்த குழம்பு

Dec-20-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைத்த குழம்பு செய்முறை பற்றி

இது பருப்பு இல்லாத சாம்பார் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் - 10
  2. புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  6. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1தேக்கரண்டி(விருப்பப்பட்டால்)
  7. தாளிக்க:கடுகு -1தேக்கரண்டி
  8. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  10. பெருங்காயம் - 1 சிட்டிகை
  11. எண்ணெய்-1தேக்கரண்டி
  12. வறுத்து அரைக்க தேவையானவை :
  13. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  14. தனியா - 1 1 / 2 தேக்கரண்டி
  15. மிளகாய் வத்தல் - 5
  16. பெருங்காயம் - 2 சிட்டிகை
  17. எண்ணெய் - 2 துளிகள்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை பாதி விரல் நீளத்திற்கு நறுக்கி வைக்கவும்
  2. வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் திரிக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. புளியை கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி போட்டு கொதிக்கவிடவும்
  5. திரித்ததை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  6. வெல்லம் சேர்த்து இறக்கவும்
  7. விருப்பப்பட்டால் கொத்தமல்லி இலை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்