வீடு / சமையல் குறிப்பு / எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

Photo of Ennai kathrikkai kuzhambu by Priya Tharshini at BetterButter
427
3
0.0(0)
0

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

Dec-21-2017
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை பற்றி

இது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான குழம்பு வகைகளில் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி - 2 சிறியது
  2. சிறிய வெங்காயம் - 15
  3. பூண்டு - 3 பல்
  4. தேங்காய் - 4 மேசைக்கரண்டி
  5. கத்திரிக்காய் - 5
  6. புளி கரைச்சல் - 1/4 கப்
  7. நல்லெண்ணய் - 4 மேசைக்கரண்டி
  8. கடுகு - 1 தேக்கரன்டி
  9. கருவேப்பிலை - சிறிது
  10. உப்பு - தேவைக்கேற்ப
  11. சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
  12. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  13. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை படத்தில் உள்ளவாறு நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் 1 மேசைக்கரண்டி நல்லெண்ணய் சேர்த்து பூண்டு , வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
  3. தக்காளி வதங்கியதும் தேங்காய் சேர்த்து வதக்கி அடுப்பை அனைத்து ஆறவிடவும்.
  4. ஆறியதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் உப்பு , மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
  5. தேவையான தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணய் , கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. பிறகு அரைத்த விழுது மற்றும் புளி கரைச்சல் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அனைக்கவும்.
  9. ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணயில் கடுகு,கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்