புதினா பன்னீர் புலாவ் (புதினாவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கொண்டைக்கடலைப் புலாவ்) | Pudina Paneer Pulao(Mint and home made chenna Pulao) in Tamil

எழுதியவர் sapna dhyani devrani  |  29th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pudina Paneer Pulao(Mint and home made chenna Pulao) by sapna dhyani devrani at BetterButter
புதினா பன்னீர் புலாவ் (புதினாவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கொண்டைக்கடலைப் புலாவ்)sapna dhyani devrani
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2138

0

புதினா பன்னீர் புலாவ் (புதினாவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கொண்டைக்கடலைப் புலாவ்) recipe

புதினா பன்னீர் புலாவ் (புதினாவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கொண்டைக்கடலைப் புலாவ்) தேவையான பொருட்கள் ( Ingredients to make Pudina Paneer Pulao(Mint and home made chenna Pulao) in Tamil )

 • 1 மற்றும் 3/4 கப் பாஸ்மதி அரிசி (தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்தது)
 • 1 கப் புதினா இலை - பொடியாக நறுக்கியது
 • 1 கப் கொண்டைக்கடலை அல்லது பன்னீர்
 • 3/4 கப் கடையப்பட்டத் தயிர்
 • 3 வெங்காயம் நறுக்கியது
 • 1 பிரிஞ்சி இலை, 3 பச்சை ஏலக்காய், 3 கிராம்பு, 2 கருப்பு ஏலக்காய், 6 கருமிளகு
 • 1 இன்ச் இஞ்சித் துண்டு, 3 பூண்டு பற்கள், 1 பச்சை மிளகாய் நசுக்கியது
 • நெய் அல்லது எண்ணெய் 4 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் நிறத்திற்காக (விருப்பம் சார்ந்தது)

புதினா பன்னீர் புலாவ் (புதினாவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கொண்டைக்கடலைப் புலாவ்) செய்வது எப்படி | How to make Pudina Paneer Pulao(Mint and home made chenna Pulao) in Tamil

 1. ஒரு கனமான அடிப்பாகமுள்ள கடாயில் நெய்யைச் சூடுபடுத்தி பிரிஞ்சி இலை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கருமிளகு ஆகியவற்றைச் சேர்த்து உடைத்துக்கொள்ளவும்.
 2. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். இவற்றோடு நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்க்கவு். 10-15 விநாடிகள் வதக்கவும்.
 3. பன்னீரையும் தயிரையும் சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும்.
 4. உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். வடிக்கட்டிய அரிசி மற்றும் நறுக்கிய புதினாவில் பாதியை மூழ்கச் செய்யவும்.
 5. மூடியிட்டு மூடி 8-10 நிமிடங்கள் அல்லது அரிசி வேகும்வரை வேகவைக்கவும்.
 6. மீதமுள்ள புதினாவை புலாவின் மீது தூவி சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்னீர் அல்லது கொண்டைக்கடலைக்குப் பதிலாக கடையில் வாங்கிய பன்னீரை பயன்படுத்தும்போது உடைத்து பயன்படுத்தலாம்.

Reviews for Pudina Paneer Pulao(Mint and home made chenna Pulao) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.