வீடு / சமையல் குறிப்பு / சௌசௌ வேற்கடலை கூட்டு

Photo of Chayote Peanut Kootu by Priya Tharshini at BetterButter
360
3
0.0(0)
0

சௌசௌ வேற்கடலை கூட்டு

Dec-21-2017
Priya Tharshini
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சௌசௌ வேற்கடலை கூட்டு செய்முறை பற்றி

சௌசௌ,வேற்கடலை,துவரம் பருப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து செய்யும் கூட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. சிவப்பு மிளகாய் - 1 + 2
  5. கருவேப்பிலை - சிறிது
  6. சௌசௌ - 1
  7. துவரம் பருப்பு - 1/2 கப்
  8. வேற்கடலை - 1/4 கப்
  9. புளி - எலுமிச்சை அளவு
  10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  11. உப்பு - தேவைக்கு
  12. தனியா - 2 தேக்கரண்டி
  13. கடலை பருப்பு - 11/2 தேக்கரண்டி
  14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  15. தேங்காய் துருவல் - 1/4 கப்
  16. கொத்தமல்லி - சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் தனியா,கடலைபருப்பு,சீரகம்,2 சி.மிளகாய் சேர்த்து வருக்கவும்.
  2. சிறிது வதங்கியதும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  3. மிதமான சூட்டில் பொன் நிறமாக வதக்கி ஆறவிடவும்.
  4. ஆறியதை மிக்ஸியில் சேர்த்து பொடி ஆக அறைக்கவும்.
  5. புளியை 1/4 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
  6. து.பருப்பு மற்றும் வேற்கடலை இரண்டையும் சிறிது நேரம் ஊற வைத்து குக்கரில் 4 விசில் வேகவிடவும்.
  7. கபாயில் சௌசௌ , மஞ்சள் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 3/4 பங்கு வேகவிடவும்.
  8. அத்துடன் புளி கரைச்சல் , அரைத்த பொடி , உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
  9. அத்துடன் வேற்கடலை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும்.
  10. வெந்த து.பருப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
  11. கொதித்தவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அனைக்கவும்.
  12. சிறிய கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு,உ.பருப்பு,வி.மிளகா,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  13. தாளித்ததை கூட்டில் சேர்க்கவம். கூட்டு தயார.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்