Photo of Curry leaves Karakuzhambu by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
449
3
0.0(1)
0

Curry leaves Karakuzhambu

Dec-21-2017
Muthulakshmi Madhavakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 10 சின்ன வெங்காயம்
  2. 10 பூண்டு பற்கள்
  3. 1 தக்காளி
  4. 1 எலுமிச்சை உருண்டை புளி
  5. 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  6. 1/2 டீஸ்பூன் கடுகு
  7. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி அல்லது குழம்பு மிளகாய் தூள்
  9. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. சிறிது கறிவேப்பிலை
  11. 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  12. உப்பு தேவையான அளவு
  13. அரைக்க
  14. 2 கப் கறிவேப்பிலை
  15. 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  16. 7 சின்ன வெங்காயம்

வழிமுறைகள்

  1. 2 கப் கறிவேப்பிலையை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் நன்றாக உலர்த்திக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்துக் கொள்ளவும். புளியை சூடான தண்ணீர் விட்டு ஊறவைத்துக் கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு மொறு மொறுப்பாக வறுத்து கொள்ளவும். (மிக்சரில் இருக்கும் கறிவேப்பிலை போல் ஆகும் வரை வறுக்கவும்).
  3. ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  4. அவை நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் புளி கரைச்சல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  6. பின் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டேபிள் டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து குழம்பை கொதிக்க விடவும்.
  7. அவை கொதிக்கும் நேரத்தில் வறுத்த கறிவேப்பிலையை தண்ணீர் விடாமல் அரைத்து பின் தேங்காய் துருவல் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
  8. குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  9. பின் அரைத்த கறிவேப்பிலை விழுது சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  10. குழம்பின் மேலே எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
  11. 20 நிமிடங்கள் குழம்பை அதே மண் சட்டியின் சூட்டிலேயே வைத்திருக்கவும். பின் பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும். இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் மற்றும் அப்பளம் வைத்து பரிமாறவும். ஆரோக்கியமான கறிவேப்பிலை கார்க் குழம்பு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-22-2017
Pushpa Taroor   Dec-22-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்