Photo of Egg cutlet gravy by Adaikkammai Annamalai at BetterButter
527
7
0.0(1)
0

Egg cutlet gravy

Dec-21-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை - 4
  2. தயிர் - 2 ஸ்பூன்
  3. பால் - 2 ஸ்பூன்
  4. சீனி - 1 ஸ்பூன்
  5. உப்பு - (1/4 ஸ்பூன் முட்டிய வேக வைக்க) ( கிரேவிக்கு தேவையான அளவு )
  6. எண்ணெய் - (2 ஸ்பூன் முட்டை வேக வைக்க) ( வதக்க 6 ஸ்பூன்)
  7. கடுகு - 1/4 ஸ்பூன்
  8. சோம்பு - 1/2 ஸ்பூன்
  9. கருவேப்பிலை - சிறிது
  10. வெங்காயம் - பெரியதாக நறுக்கியது 1
  11. தக்காளி - 2
  12. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  13. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்;
  14. வரமிளகாய்- 7
  15. சோம்பு - 1ஸ்பூன்
  16. தேங்காய் பூ துருவியது - 2 ஸ்பூன்
  17. பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
  18. இஞ்சி - சிறு துண்டு
  19. வெங்காயம் - 1/2 ..,தக்காளி - 1/2 ,, பூண்டு -6

வழிமுறைகள்

  1. முதலில் முட்டையை வேக வைப்பதற்கு 4 முட்டையை எடுத்து உடைத்து ஒரு பாத்தி்ரத்தி சேர்க்கவும்.
  2. அதில் தயிர், பால் . உப்பு 1/4 ஸ்பூன்., மஞ்சத்தூள் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும் சேர்த்தால் கவுச்சி இருக்காது திகட்டாது அதற்குத்தான் சீனி .
  3. அதன் பின் நன்றாக விஸ்க் செய்யவும்.
  4. அதனுடன் 1 ஸ்பூன் எண்ணெய் விடவும் சேர்த்து நன்றாக விஸ்க் செய்யவும்
  5. விஸ்க் செய்து தயார் செய்ததை குக்கரில் வேக வைக்கவும். 1 சவுண்ட் 5 நிமிடம் சிமில் வேக வைக்கவும்
  6. வேக வைத்ததை எடுத்து துண்டு போட்டு எடுத்து கொள்ளவும்
  7. அதன் பின் இருப்பு சட்டியில் அரைக்க வேண்டியதை வதக்கி எடுக்க வேண்டும்
  8. அதற்கு முதலில் இருப்பு சட்டியில் எண்ணெய் விட்டு சோம்பு, பூண்டு போட்டு வதக்கவும்
  9. அதன் பின் சிறிது, வெங்காயம் , தக்காளி , தேங்காய் பூ, வரமிளகாய் போட்டு நன்றாக வதக்கி வ்டுத்து கொள்ளவும்.
  10. வதக்கி எடுத்தது ஆறியவுடன் அரைத்து எடுத்து கொள்ளவும்
  11. அதன் பின் இருப்பு சட்டியில் எண்ணெய்யை காய வைத்து கடுகு சோம்பு., வெங்காயம் , தக்காளி. உப்பு, மஞ்சத்தூள் போட்டு வதக்கவேண்டும் .
  12. அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து தண்ணி ஊற்றி கொதிக்க விடவும்
  13. நன்றாக கொதிகக் விட்டு உப்பு பார்த்து தேவை என்றால் போட்டு கொதிக்க விடவும்
  14. பின் அதில் கடைசியாக துண்டு போட்ட முட்டையை கடைசியாக சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாகி இறக்கவும்
  15. சுவையான முட்டை கிரேவி தயார் மேலே சிறிது தயிர் விட்டு சாப்பிடலாம். புலாவ், சப்பாத்தி , இட்லி அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-21-2017
Pushpa Taroor   Dec-21-2017

Havent made so far wil try

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்