மீன் சொதி | Meen sothi in Tamil

எழுதியவர் Mughal Kitchen  |  21st Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Meen sothi recipe in Tamil,மீன் சொதி, Mughal Kitchen
மீன் சொதிMughal Kitchen
  • ஆயத்த நேரம்

    25

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

3

0

5 votes
மீன் சொதி recipe

மீன் சொதி தேவையான பொருட்கள் ( Ingredients to make Meen sothi in Tamil )

  • துண்டுமீன் 500 கிராம்
  • வெங்காயம் 200 கிராம்
  • தக்காளி 250 கிராம்
  • நல்லெண்ணெய் 100 கிராம்
  • அரைமூடி தேங்காயில்எடுத்த பால் 300 மில்லி
  • மல்லிதூள் 2 மேஜைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் தேவைக்கு
  • வெள்ளைபூண்டு மூண்று
  • வெந்தயம் சிறிது
  • சோம்பு சிறிது
  • ஒரு மிளகாய் வத்தல்
  • கருவேப்பில்லை மல்லி சிறிது
  • கடுகு சிறிது
  • தேங்காய்எண்ணெய் இரண்டு மேஜைக்கரண்டி

மீன் சொதி செய்வது எப்படி | How to make Meen sothi in Tamil

  1. மீனை சுத்தம் செய்து வைக்கவும்
  2. வெஙகாயம் தக்காளி நறுக்கவும்
  3. பின் அரைத்து னவக்கவும்
  4. தேங்காய் பால் எடுக்கவும்
  5. வானலியை அடுப்பில்வைத்து எண்ணெய் சுடானதும் தாளிக்க
  6. தாளிக்க சோ்க்கவும்
  7. பின் வெங்காயம் சோ்க்கவும்
  8. பின் தக்காளி சோ்க்கவும்
  9. வெங்காயம் தக்காளி நன்கு வதங்க உப்பு சோ்க்கவும் இருபது நிமிடம் வதக்கவும். பின் மல்லி,மிளகாய்த்தூள் சோ்க்கவும்
  10. பின் இரண்டு டம்ளா் நீர் விட்டு கிளறவும்.பின் மீன் சோ்க்கவும்
  11. பத்து நிமிடம் கழித்து மல்லிச்செடி தேங்காய்ப்பால் இரண்டு மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்
  12. தேங்காய்பால் சோ்த்து ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.பின் அரைபழம் எலுமிச்சை சாறு சோ்க்கவும். சுவையான மீன் சொதி தயாா்..

எனது டிப்:

மீனை உப்பு மிளகாய்தூள் சோ்த்து பொறித்தும் குழம்பில் சோ்க்கலம்.

Reviews for Meen sothi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.