Photo of Prawn vegetable gravy by Yasmin Shabira at BetterButter
479
7
0.0(2)
0

Prawn vegetable gravy

Dec-21-2017
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் - 150 கிராம்
  2. தேங்காய் : ஒரு மூடி
  3. வெங்காயம் : 2
  4. தக்காளி : 1
  5. பச்சை மிளகாய் : 2
  6. கறிவேப்பிலை : ஒரு கொத்து
  7. சோம்பு : 1 தேக்கரண்டி
  8. காய்கறிகள் : 2 கப்
  9. மிளகாய் தூள் : 1 மேசைக்கரண்டி
  10. ஜீரகதூள் : 1 தேக்கரண்டி
  11. மல்லி தூள் : 3 மேசைக்கரண்டி
  12. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
  13. புளி : ஒரு எலுமிச்சை அளவு
  14. உப்பு : ருசிக்கேற்ப
  15. எண்ணெய் : 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேங்காயை நன்றாக அரைத்து பால் பிழிந்து திக்கான பாலை தனியாகவும் தண்ணியான இரண்டாவது மூன்றாவது தேங்காய் பாலை தனியாகவும் வைத்து கொள்ளவும்...
  2. புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்..
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை சிறிது வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்...
  4. ஒரு பௌளில் 1/2 தேக்கரண்டி அளவு மிளகாய் தூள் சேர்த்து அதில் தாளித்ததை கலந்து தனியாக வைக்கவும்...
  5. அதே கடாயில் மீதமுள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்...
  6. வெங்காயம் கண்ணாடியாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்...
  7. நன்றாக வதங்கியதும் காய்கறி சேர்த்து 2-3 நிமிடம் வரை நன்றாக பிரட்டவும்...
  8. பின்னர் கொடுக்க பட்டுள்ள எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து 1 நிமிடம் குறைந்த தீயில் கிளறவும்...
  9. பின் எடுத்து வைத்த இரண்டாவது மூன்றாவது தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கிளறவும்...
  10. மசாலா நன்றாக கலந்ததும் கடாயை மூடி 5-6 நிமிடம் அதிக தீயில் கொதிக்க விடவும்...
  11. நன்றாக கொதித்து மசாலா வாசம் அரங்கிய பின் இறால் சேர்த்து மேலும் 7-8 நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறாலை வேக விடவும்....
  12. இறால் மற்றும் காய்கறிகள் நன்றாக வெந்ததும் புளி கரைசல் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விட்டு கடைசியில் எடுத்து வைத்த திக்கான தேங்காய் பாலை ஊற்றி உடனே இறக்கிவிட வேண்டும்...
  13. திக்கான தேங்காய் பால் ஊற்றிய பிறகு கொதிக்க விட கூடாது...
  14. இறக்கிய பின் தாளித்து வைத்ததை குழம்பில் கொட்டி பறிமாறவும்...

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ghee Dosa
Dec-23-2017
Ghee Dosa   Dec-23-2017

Something very tasty, not to miss

Pushpa Taroor
Dec-21-2017
Pushpa Taroor   Dec-21-2017

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்