வீடு / சமையல் குறிப்பு / உணவக பாணியிலான வெஜிடபிள் தம் பிரியாணி

Photo of Restaurant style vegetable Dum Biryani by Sathya Priya Karthik at BetterButter
1498
60
4.7(0)
0

உணவக பாணியிலான வெஜிடபிள் தம் பிரியாணி

Jan-29-2016
Sathya Priya Karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 தேக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய்
  2. 1 தக்காளி
  3. 1 பெரிய வெங்காயம் வறுப்பதற்கு
  4. 1 கப் நறுக்கப்பட்ட புதினா + கொத்துமல்லி இலைகள்
  5. காய்கறிக் கலவை (5-6 காளான், 2 கேரட், 1 உருளைக்கிழங்கு, 1 கொத்து புரோகோலி)
  6. 2 தேக்கரண்டி பிரியாணி மசாலா
  7. 2 தேக்கரண்டி கெட்டித் தயிர்
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள்
  9. 1/8 தேக்கரண்டி கரம் மசாலா
  10. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. 1/2ல் இருந்து 3/4 கப் கோதுமை மாவு (மாவாக பிசையப்பட்டது)
  13. 1 3/4 கப் அரிசி தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊறவைத்தது
  14. 1 ஏலக்காய்
  15. 1/2 பே இலை
  16. மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
  17. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. நீளவாக்கில் நறுக்கப்பட்டபின் வெங்காயத்தை நன்றாக வறுத்துக்கொள்ளவும். கூடுதல் எண்ணெயை பேப்பர் துண்டில் வடிக்கட்டிக்கொள்க. எடுத்து வைத்துக்கொள்க.
  2. காய்கறிகளை கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்க. எடுத்து வைத்துக்கொள்க.
  3. கெட்டித் தயிர், உப்பு, மஞ்சள், கரம் மசாலா, பிரியாணி மசாலா ஆகியவற்றை காய்கறிகளோடு சேர்த்துக்கொள்ளவும்.
  4. ஒரு கலக்குக் கலக்கி பிரிஜில் 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
  5. கொஞ்சம் தண்ணீர் விட்டு கோதுமை மாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு போல் செய்து, எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு வானலியில் போதுமான தண்ணீர் விட்டு, பே இலையையும் ஏலக்காயையும் தண்ணீரில் சேர்த்துக்கொள்க.
  7. போதுமான உப்பு மஞ்சள் தூளை தண்ணீரில் சேர்த்துக்கொள்க.
  8. தண்ணீர் கொதிக்கும்போது, ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
  9. அரிசி மூன்று பாகங்களாக உடையும்போது, கூடுதல் தண்ணீரை ஒரு வடிக்கட்டியால் நீக்கிவிட்டு அரிசியை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  10. வெண்ணெயையும் 1 தேக்கரண்டி எண்ணெயையும் 'தம்' வானலியின் அடியில் எடுத்துக்கொள்க.
  11. நறுக்கப்பட்ட தக்காளி சேர்த்து சிறிது நேரம் அவை சாறு நிறைந்ததாக மாறும்வரை வறுக்கவும். அடுத்து இஞ்சி பூண்டை சேர்த்து வறுக்கவும்.
  12. அடிப்பாகத்தில் மேரினேட் செய்த காய்கறிகளைச் சேர்க்கவும்.
  13. அடுத்து, ஒரு அடுக்கு அரிசி சேர்த்து அதன்பிறகு வறுத்த வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  14. இறுதியாக நறுக்கப்பட்ட புதினாவையும் கொத்துமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
  15. அதன்பிறகு மீண்டும் ஓர் அடுக்கு அரிசி, வறுத்த வெங்காயம், புதினா/கொத்துமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
  16. சப்பாத்தி மாவை மெல்லி பட்டைகளாக உருட்டி தம் வானலி மூடியை மாவால் மூடவும்.
  17. மூடிபோட்டு மூடி 200 டிகிரிக்கு ஓவனில் 15 நிமிடங்கள் வைத்து, 150 டிகிரிக்கு வெப்பத்தைக் குறைத்து மேலும் 20 நிமிடங்கள் வைக்கவும்.
  18. வெளியில் எடுத்து மெதுவாகக் கிண்டவும். தம் பிரியாணி பரிமாறுவதற்குத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்